ஜனநாயகன் இந்தி தலைப்பை கவனித்தீரா? போஸ்டருடன் வெளிவந்தது
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது அரசியலில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, அவர் தற்காலிகமாக தனது திரைப்பயணத்திற்கு விடை கொடுக்கும் வகையில் எச். வினோத் இயக்கத்தில் தனது கடைசி ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பாலிவுட் வில்லன் மோதல்: இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் திரையரங்குகளில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பொங்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமே இந்தத் தேதிக்காக காத்திருக்கிறது.
இந்தியில் 'ஜன் நேட்டா': இப்படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு 'ஜன் நேட்டா' (Jan Neta) என்ற பெயரில் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் மூலம் வட இந்தியாவிலும் விஜய்யின் மார்க்கெட்டை வலுப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஜீ ஸ்டுடியோஸ் வெளியீடு: 'ஜனநாயகன்' திரைப்படத்தை முன்னனி தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் (Zee Studios) விநியோகம் செய்கிறது. தரமான படைப்புகளை வழங்கி வரும் இந்நிறுவனம், விஜய்யின் கடைசிப் படத்தை பிரம்மாண்டமான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

வைரலாகும் போஸ்டர்: தற்போது இந்தப் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. விஜய் மற்றும் பாபி தியோல் இருவரும் இடம்பெற்றுள்ள இந்த அதிரடியான போஸ்டர், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்பதை இந்த போஸ்டர் உறுதிப்படுத்துகிறது.
