Lokah வசூலை பார்த்துட்டு ரிலீஸ் தேதியை தள்ளிபோட்ட துல்கர்.. ஷாருக் கானை மிஞ்சிய கல்யாணி

ஒரு கலைஞனுக்குப் பெருமையாக இருக்கும் சாதனை என்னன்னா, அவர் நாட்டிலேயே மிக பிரபலமானவர் என்று அங்கீகாரம் பெறுவது தான். அந்த வரிசையில், கல்யாணி பிரியதர்ஷன் இந்த வாரம் IMDb-யின் Most Popular Indian Celebrities பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறார். ஷாருக்கானை 2ம் இடத்தில உள்ளார், இது ரசிகர்களுக்கும், தமிழ் – மலையாள சினிமாவுக்கும் பெருமை சேர்க்கும் சாதனை.

Kalyanipriyadharshini – IMDB rating first place

இந்த வெற்றிக்கான முக்கிய காரணம் அவர் நடித்திருக்கும் Lokah Chapter 1 படம். Dominic Arun இயக்கத்தில் வெளிவந்த இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைக்கிறது. உலகளாவிய அளவில் படம் 200 கோடி வசூல் கடந்துவிட்டது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் மட்டும் இல்லாமல், வெளிநாட்டிலும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

மேலும், Kaantha படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காரணம் – Kaantha படத்தின் ஹீரோ துல்கர், Lokah படத்தின் தயாரிப்பாளர். அதனால் Lokah பாக்ஸ் ஆபிஸில் ஓடிக்கொண்டிருக்கும் வெற்றிக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Kaantha release date postponed

ரசிகர்கள் ஆர்வத்துடன் பட டிக்கெட் புக்கிங் செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் BookMyShow-இல் நடந்த புக்கிங்கில்:

  • Lokah Chapter 1 (Day 14) – 1.48 லட்சம் டிக்கெட்கள்
  • Demon Slayer (Pre-sales) – 1.17 லட்சம் டிக்கெட்கள்
  • Mirai (Pre-sales) – 63,000+ டிக்கெட்கள்

இது மட்டும் பார்த்தாலும், Lokah படத்துக்குக் கிடைக்கும் ரசிகர் ஆதரவு என்ன லெவலில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

கேரளா பாக்ஸ் ஆபிஸில் மட்டும் படம் 14 நாட்களாக Rule பண்ணிக் கொண்டிருக்கிறது. Day 14-இல் மட்டும் ₹3.50 கோடி சேர்த்து, மொத்த வசூலை ₹71.68 கோடியாக உயர்த்தியுள்ளது. இந்த அளவிலான வெற்றி, கல்யாணி பிரியதர்ஷன்-க்கு மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

முடிவாக..

IMDb லிஸ்டில் நம்பர் 1 இடம், Lokah-வின் பாக்ஸ் ஆபிஸ் சாதனை, கேரளா ரசிகர்களின் கொண்டாட்டம் – எல்லாம் சேர்ந்து கல்யாணி பிரியதர்ஷனை பான்-இந்தியா ஸ்டாராக உயர்த்தி நிறுத்தியிருக்கிறது. அடுத்து அவர் எதை தேர்வு செய்கிறார் என்பதே ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் விஷயம்.