மருமகனுக்கு வலை விரித்த கமல்.. இட்லி கடைக்கு பின் பிரம்மாண்ட கூட்டணியில் தனுஷ்!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தனுஷ் தொடர்ந்து தன் திறமையை நிரூபித்து வருகிறார். பவர் பாண்டி மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், அந்த படத்திலிருந்தே ஒரு உண்மையான கதை சொல்லியின் ஆன்மாவை வெளிப்படுத்தினார். அப்பாவின் வாழ்க்கையை, வயதானவர்களின் உணர்ச்சியை, குடும்ப பந்தத்தை நெகிழ்ச்சியாக எடுத்துக்காட்டிய அந்த படம் அவரை இயக்குநராகவே தனி அடையாளம் கொடுத்தது. அதன் பின் அவரின் ராவுக்கோழி, நான் ரெடி போன்ற திட்டங்களும் பேச்சில் இருந்தாலும், பல காரணங்களால் தாமதமானது.
இதே நேரத்தில், தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் தலைவர் 173 பற்றி ஒரு தகவல் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குவதற்கு தனுஷ் முக்கியமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறாராம். சுந்தர் சி விலகியதும், புதிய இயக்குநர் தேடலில் ராஜ்கமல் பிலிம்ஸ் உள்ளதாகவும், அந்த லிஸ்டில் மிக முக்கியமாக வந்த பெயர் தனுஷ் என்பதும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனுஷ் ரஜினியின் மருமகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இவர் ஒரு பிளிம் மேக்கராக, ரஜினிகாந்த் அளவுக்கு ஒரு பெரிய ஸ்கேல் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதே இந்த செய்தியின் முக்கியத்துவம். இருவருக்கும் இருக்கும் பந்தம், கலை மீதான மரியாதை, மற்றும் தனுஷின் இயக்குநர் திறமை - எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது இந்த கூட்டணி இயல்பானதாகவே தோன்றுகிறது.
ரஜினிகாந்த் தனது படத்தேர்வுகளில் மிகவும் கவனமாக இருப்பவர். ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமூக, உணர்ச்சி, மாஸ் கதைகளையே அவர் தேர்வு செய்வது வழக்கம். அதனால், தனுஷின் கதை சொல்லும் ஸ்டைலும், உணர்ச்சியை வேற லெவலுக்கு கொண்டு செல்வதற்கான டாலன்ட்-ம் ரஜினியின் எதிர்பார்ப்புகளோடு பொருந்துவதாகவே பலரும் நம்புகின்றனர். இவர்களின் காம்பினேஷன் திரையில் நடந்தால் அது ரசிகர்களுக்கு ஒரு வரலாற்று தருணம் தான்.
ரஜினியை இயக்குவது எளிதில்லை. அவரது ஸ்கிரீன் பிரசென்ஸ், பேன் பீஸ், மாஸ் எலிமென்ட் - இதில் எதையும் தவற விட்டால் படம் சரியாக வேலை செய்யாது. அந்த அளவுக்கு ஒரு பயிற்சி உடைய கலைஞராக தனுஷ் இருக்கிறார். மொத்தத்தில், ரஜினி மற்றும் தனுஷ் ஒரே படத்தில் - அது கூட தனுஷ் இயக்கத்தில் - இணைவது தமிழ் சினிமாவுக்கே ஒரு மைல்கல் நிகழ்வாக இருக்கும்.
ஏற்கனவே குடும்ப பிரச்சனையில் பிரிந்து கிடக்கும் ரஜினி-தனுஷ் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்த கூட்டணி அமைந்தால் வெற்றி உறுதி. லோகேஷ், நெல்சன், மணிரத்தினம் போன்ற இயக்குனர்கள் வரிசையில் தற்போது தனுஷ் இணைந்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது. தனுஷ் ஹாலிவுட் வரை பல படங்களில் கமிட் ஆகியுள்ளதும் எப்படி இந்த கூட்டணியை கையாள போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்ற செய்தி மட்டும் வந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வருகிறது என்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது நடந்தால், 2026–27 காலத்தில் தமிழ் சினிமா காணும் மிகப் பெரிய காம்பினேஷன் இதுவாகவே இருக்கும்.
