1. Home
  2. சினிமா செய்திகள்

2026ல் கார்த்தியின் அதிரடி.. வரிசைகட்டும் 5 மெகா ஹிட் படங்கள்!

karthi

2026ம் ஆண்டு நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. ஆக்ஷன், காமெடி, த்ரில்லர் என வித்யாசமான கதைக்களங்களில் கார்த்தி நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாகத் தயாராக உள்ளன.


2026ம் ஆண்டு கார்த்தி ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான ஆண்டாக அமையவுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாக வேண்டிய 'வா வாத்தியார்' திரைப்படம், சில தணிக்கை (Sensor) நடைமுறைகளால் தள்ளிப்போனது. 'சூது கவ்வும்' புகழ் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், கார்த்தியின் கேரியரில் ஒரு முக்கியமான நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம், வரும் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளது. இதில் கார்த்தி ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து மெகா ஹிட்டான 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவாகும் 'சர்தார் 2', முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் உருவாகி வருகிறது. இப்படத்திற்காக கார்த்தி பல வெளிநாடுகளில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம், 2026-ன் பாதியிலேயே கோடை விடுமுறை வெளியீடாக வர வாய்ப்புள்ளது.

'டாணாக்காரன்' படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த இயக்குனர் தமிழ், அடுத்ததாக கார்த்தியை வைத்து 'மார்ஷல்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இது ஒரு பீரியட் ஆக்ஷன் டிராமா என்று சொல்லப்படுகிறது. இதில் கார்த்தியுடன் இணைந்து சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. யதார்த்தமான மேக்கிங் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைக்கு பெயர் பெற்ற இயக்குனர் தமிழ் என்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வர்த்தக ரீதியாகவும் அதிகமாக உள்ளது.

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் வெளியான 'ஹிட் 3' (HIT: The Third Case) திரைப்படத்தின் இறுதியில் கார்த்தி ஒரு அதிரடியான கேமியோ தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக, 'ஹிட் 4' படத்தில் கார்த்தி முழுநேர கதாநாயகனாக களமிறங்குகிறார். சைலேஷ் கொலானு இயக்கும் இந்தப் படம், 'ஹிட்' யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகிறது. இதில் ஒரு துடிப்பான காவல்துறை அதிகாரியாக கார்த்தி தனது புலனாய்வுத் திறனை வெளிப்படுத்துவார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இவை தவிர, ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள 'கைதி 2' படத்தின் மீது உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் 2026ன் இறுதியில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்தார் 2, மார்ஷல் எனத் தொடர்ச்சியாக பிஸியாக இருக்கும் கார்த்தி, இந்த ஆண்டு தனது மார்க்கெட் மதிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என்பதில் சந்தேகமில்லை.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.