ஏடாகூடமாக சிக்கிய கீர்த்தி சுரேஷ்.. கருப்பு கண்ணாடி இயக்குனரிடம் மாட்டினார்

Keerthy Suresh : திருமணத்திற்குப் பிறகு கீர்த்தி சுரேஷின் திரையுலகப் பயணம் சவால்களுடன் தொடர்கிறது. முன்னணி ஹீரோயினாக இருந்த அவர், சமீபத்தில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியது. உப்பு கப்புரம்பு மற்றும் பாலிவுட் அறிமுகமான பேபி ஜான் ஆகியவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனால், கீர்த்திக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக ஒரு கருத்து உருவாகியுள்ளது. ஆனால், இந்த சவாலான சூழ்நிலையிலும் கீர்த்தி சுரேஷ் தனது கேரியரை மீண்டும் செழிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அந்த முயற்சியின் முதல் படியாக, புகழ்பெற்ற இயக்குநர் மிஸ்கின் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

மிஸ்கின் கதை – கீர்த்திக்கு மீண்டும் லைம் லைட்?

மிஸ்கின் படங்களில் எப்போதும் கதாநாயகிக்கு தனி முக்கியத்துவம் இருக்கும். அதனால், இந்த படம் கீர்த்தி சுரேஷின் கேரியரில் மீண்டும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிஸ்கின் தனித்துவமான திரைக்கதை, தீவிரமான கேரக்டர்கள், மனதில் பதியும் காட்சிகள் ஆகியவை கீர்த்திக்கு வலுவான கதாநாயகி நிலையைத் தரும் வாய்ப்பு அதிகம்.

mysskin
mysskin

மேலும் மிஸ்கின், கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தை விஜய்யின் மேனேஜரான ஜெகதீஷின் தி ரூட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தயாரிக்க இருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர், லியோ படத்தை இணைந்து தயாரித்த இந்நிறுவனம் மகாராஜா படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிசாசு 2 தாமதம் – ஆண்ட்ரியா காத்திருக்கும் படம்

இதற்கு இணையாக, இயக்குநர் மிஸ்கின் இயக்கிய பிசாசு 2 படம் இன்னும் வெளியாகாமல் தாமதமாகி வருகிறது. அந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் வெளியாகாமல் இருக்க, ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், மிஸ்கின் அடுத்த பட அறிவிப்பில் கீர்த்தி சுரேஷ் பெயர் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீர்த்தியின் ரசிகர்களுக்கான நம்பிக்கை

திருமணத்துக்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், கீர்த்தி சுரேஷ் தனது திறமையால் மீண்டும் முன்னணி ஹீரோயினாக வலுவாக வருவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. “மிஸ்கின் – கீர்த்தி” கூட்டணி சினிமா ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பது உறுதி.

ஆனால் பிசாசு 2 படமே தற்போது வரை வெளியாகாமல் இருக்கிறது. இதனால் ஆண்ட்ரியா வெளியில் தலை காட்டாமல் இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் ட்ரெயின் படத்தைப் பற்றிய அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. இப்படி உள்ள சூழலில் ஏடாகூடமாக மிஷ்கினை நம்பி கீர்த்தி சுரேஷ் இறங்கி இருக்கும் நிலையில் அவருக்கு இந்தப் படம் கை கொடுக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.