மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம்.. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான ரகசிய காதலி!

Madhampatty Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்திருக்கும் செய்தி தான் இன்று பொழுது விடியும் முன்பே சமூக வலைத்தளத்தில் வைரலானது. நெருப்பில்லாமல் புகையாது என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.

அப்படித்தான் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டிலா என்பவரை காதலிக்கிறார் என்று வெளியான வதந்தி. ஜாய் தொடர்ந்து ஆறு மாதங்களாகவே பல காதல் போஸ்ட்டுகள் புகைப்படங்களில் மாதம்பட்டி ரங்கராஜன் டேக் செய்து கொண்டிருந்தார்.

இன்னொரு பக்கம் மாதம்பட்டி முதல் மனைவி நான் தான் மாதம்பட்டி ரங்கராஜன் மனைவி என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டார். இவை இரண்டிற்குமே மாதம்பட்டி ரங்கராஜ் பதிலளிக்காமல் குக் வித் கோமாளி 2 வில் பிஸியாக இருந்தார்.

இந்த நிலையில் தான் ஜாய், கோவிலில் ரங்கராஜ் ஜாய்க்கு குங்குமம் வைத்துவிடும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் அந்தப் புகைப்படத்தின் கீழே மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ரங்கராஜ் என பதிவிட்டிருக்கிறார்.

இரண்டாவது திருமணம்

Madhampatty
Madhampatty

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பயோவில் ரங்கராஜன் மனைவி மற்றும் நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம் (wife of Maadhampatti Rangaraj & We are pregnant) என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பே ஜாய் கர்ப்பமாக இருந்திருக்கிறார் என்ற செய்தியும் மாதம்பட்டி ரங்கராஜன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் மாதம்பட்டி இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Madhampatti family
Madhampatti family

முதல் மனைவி ஸ்ருதி மற்றும் குழந்தைகளுடன் மாதம்பட்டி ரங்கராஜ்