Sivakarthikeyan: சொந்த செலவில் சூனியம் வைப்பது என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை தான் நடிகர் சிவகார்த்திகேயன் செய்து விட்டதாக தற்போது ஒரு புகைப்படம் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன் சினிமாவுக்குள் வந்தபோது இருந்த உடலமைப்பாக இருக்கட்டும் முக அமைப்பாக இருக்கட்டும் இப்போது பல மடங்கு மெருகேரி பக்கா ஹீரோ மெட்டீரியலாக இருக்கிறார்.
ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு தகுதியான உடம்பை அமரன் படத்தில் கொண்டு வந்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சிவகார்த்திகேயன் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே உடற்கட்டமைப்பை ஒரு ராணுவ வீரருக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொண்டார் என்று பலராலும் புகழ்ந்து பேசப்பட்டது.
கேரியருக்கு சூனியம் வச்சுகிட்டாரே!
தற்போது அந்த உடலமைப்பு வருவதற்காக அவர் ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டதாகவும், அதன் பக்க விளைவாக தற்போது அவருடைய முகம் அமைப்பு மொத்த மாறிவிட்டதாகவும், வயதான தோற்றம் போல் இருப்பதாகவும் ஒரு புகைப்படம் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறது.

வைரல் புகைப்படம்
சிவகார்த்திகேயன் ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை. இந்த மருந்தை உட்கொண்டதால் பக்கவிளைவாக இவருடைய முகம் இப்படி ஆகிவிட்டது என்று தான் சொல்லப்படுகிறது.
அமரன் ரிலீசான சமயத்தில் அவருடைய உடற்பயிற்சியான சிவகார்த்திகேயன் சரியான சாப்பாடு மற்றும் உடற்பயிற்சியில்தான் இப்படி ஒரு தோற்றத்தை கொண்டு வந்திருக்கிறார் என்று சொல்லி இருந்தார். நமக்கும் பெரிதாக அவருடைய முக அமைப்பில் மாற்றம் இல்லாதது போல் தான் இருக்கிறது.
ஆனால் இந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால் அவருடைய மூக்கு மற்றும் வாய்ப்பகுதிகள் எல்லாம் சதைகள் லூசாகி வயதானது போல் இருக்கிறது. அமரன் அவருக்கு மிகப்பெரிய சூப்பர் ஹிட் படம் தான்.
ஆனால் அந்த படத்திற்காக குறுகிய காலகட்டத்தில் உடம்பை ஏற்ற அவர் பின்பற்றிய பாதை ஸ்டிராய்டுகள் என்றால், கண்டிப்பாக யானை தன் தலையிலே மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல், சிவகார்த்திகேயன் தன்னுடைய கேரியரை கெடுத்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.