Nivetha pethuraj: ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிர் பிடித்தவன் போன்ற படங்களில் நடித்தது தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து தெலுங்கில் இரண்டு படங்களை நடித்த பிறகு அங்குள்ள ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.
ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் கல்யாண வாழ்க்கைக்குள் இணைவதற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன் இவருடைய காதலனை அறிமுகப்படுத்தும் விதமாக காதலுடன் ரஜித் இப்ரான் உடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். உடனே ரசிகர்கள் இவருடைய காதலுக்கும் கல்யாணத்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
இந்த சமயத்தில் பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலி, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தால் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. அதாவது நிவேதா பெத்துராஜ் காதலனை அறிமுகப்படுத்திய ரஜித் இப்ரான் ஜூலியின் முன்னாள் காதலன் என்று சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜூலி அவருடைய எக்ஸ் பக்கத்தில் 2018 ஆம் ஆண்டு ரஜித் இப்ரான் உடன் இருந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இது மட்டும் இல்லாமல் அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அத்துடன் இவர் தொடர்பான புகைப்படங்கள் அனைத்திலும் தன்னுடைய பெஸ்டி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதையெல்லாம் வைத்து ஒருவேளை ஜூலியின் முன்னாள் காதலனாக நிவேதா பெத்துராஜின் காதலனாக ரஜித் இப்ரான் இருப்பாரோ என்ற சந்தேகம் இணையவாசிகளுக்கு உருவாகி இருக்கிறது.

அதற்கு காரணம் பெஸ்டி என்றாலே முன்னாள் காதலர் என்று தான் அர்த்தம். அந்த வகையில் ஜூலி இப்பொழுது போட்டிருக்கும் புகைப்படத்தையும் அதில் பெஸ்டி என்று சொல்லி இருப்பதையும் வைத்து ஒரு நேரத்தில் ஜூலிக்கும் ரஜித் இப்ரான்க்கும் காதல் உருவாகி இருக்கலாம். அதன்பிறகு பிரிந்து தற்போது நிவேதா பெத்துராஜ் உடன் சேர்ந்திருப்பதாகவும் சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது.