1. Home
  2. சினிமா செய்திகள்

நவம்பர் 28 வெளியீடுகள்.. இந்த வாரம் தியேட்டர்களை கலக்கும் 4 புதிய தமிழ் படங்கள்!

revolver-rita-keerthi-suresh

நவம்பர் 28 அன்று நான்கு புதிய தமிழ் படங்கள்  பிரைடே, ரிவால்வர் ரீட்டா, ஒண்டிமுனியும் நல்லபாடனும்,மற்றும் வெள்ளகுதிரதியேட்டர்களில் வெளியாகின்றன.


திரையரங்குகள் மீண்டும் உயிர் பெறும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. குறிப்பாக நவம்பர் 28 ஆம் தேதி நான்கு வெவ்வேறு வகை படங்கள் தியேட்டரில் ஒரே நாளில் வெளியாக இருப்பது சினிமா ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம். இவை அனைத்தும் வித்தியாசமான கதைக்களம், புதுமையான அணுகுமுறை, திறமையான நடிகர்கள், உருக்கமான உணர்வுகள் போன்ற பல அம்சங்களை தங்களுள் கொண்டுள்ளன. ஆகவே இந்த வாரம் திரையரங்குகளில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என்பதை விரிவாக பார்ப்போம்.

1.பிரைடே

அனிஷ் மாசிலாமணி நடிக்கும் “பிரைடே” திரைப்படம் கிராமத்து பசத்தையும் நகரத்து நிஜ வாழ்க்கையின் எமோஷன்களையும் இணைத்து சொல்லும் ஒரு டிராமாவாக உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. குடும்ப பிரச்சினைகள், சமூக மாற்றங்கள், உறவுகளில் உள்ள ஒளி-நிழல் போர்கள் போன்றவற்றை இயல்பாக காண்பிக்கும் விதமாக கதை நகர்கிறது.

இத்திரைப்படத்தில் தீனா மற்றும் மைம் கோபி நடித்திருப்பது மேலும் ஒரு ஈர்ப்புக்குறியே. அவர்களின் நடிப்பு படத்தின் உணர்ச்சி தாக்கத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோ பட்ஜெட்டில் வந்தாலும் ஸ்ட்ராங் கான்டென்ட் படமாக Friday இந்த வாரம் குடும்ப பார்வையாளர்களை அதிகமாக கவரும் படங்களில் ஒன்றாக இருக்கும்.

2.ரிவால்வர் ரீட்டா

கீர்த்தி சுரேஷ் லேடிஸ் சென்ட்ரிக் படங்களில் தொடர்ந்து தனித்துவமான தேர்வுகளை செய்பவர். அந்த வரிசையில் “ரிவால்வர் ரீட்டா” அவரது மிக-வேறுபட்ட கதாபாத்திரங்களில் ஒன்றாக ஜொலிக்கிறது. சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகிறது.

டீசரில் கீர்த்தி சுரேஷின் மாஸ் மற்றும் ஆக்ஷன் நடிப்புக்கு ரசிகர்களிடையே ஏற்கனவே நல்ல ‘பஸ்’ உருவாகியுள்ளது. பெண்கள் முன்னணியில் வரும் ஆக்ஷன்-த்ரில்லர்கள் குறைவாக இருக்கும் நிலையில், ரிவால்வர் ரீட்டா இந்த வாரம் கண்டிப்பாக பேசப்படும் படமாக இருக்கும். வலுவான கதைக்களம் மற்றும் ஸ்டைலான பிரெஸன்டேஷன் இதன் USP.

3.ஒண்டிமுனியும் நல்லபாடனும்

கொங்கு வட்டாரத்தின் மண் வாசனையை உணர்த்தும் படங்கள் எப்போதுமே ஒரு தனி ரசிகர்களை உருவாக்குகின்றன. அந்த வரிசையில் “ஒண்டிமுனியும் நல்லபாடனும்” ஒரு இயல்பான, சமூக பின்னணியை பேசும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

சுகவனம் இயக்கியுள்ள இந்த படத்தில் விவசாய வாழ்க்கை, கிராமத்திருவிழா, சமூக மதிப்புகள், பழமையான எதிர்ப்புகள் போன்றவற்றை யதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கே.கருப்புசாமி இந்த வருடம் ஒரு தரமான திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு வருகிறார். இயற்கை, உணர்வு, கிராமத்து சார்மை மூன்றையும் இணைக்கும் இந்த படம் ரூரல் ஆடியன்ஸையும் குடும்ப பார்வையாளர்களையும் திரையரங்குகளுக்கு அழைக்கும் வகையில் இருக்கும்.

4.வெள்ளகுதிர

நிஜம் சினிமாவின் தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கிய “வெள்ளகுதிர” இந்த வாரம் அதிக எதிர்பார்ப்புயுடன் வெளியாகும் படங்களில் ஒன்றாகும். இந்த படம் உலகளவில் 62 நாமினேஷன்களும் 54 விருதுகளையும் குவித்திருக்கிறது என்பது மிகப் பெரிய சாதனை.

சிறந்த நடிகருக்கு மட்டும் 26 விருதுகள், படத்திற்கே 23, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 6 என்ற அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் ஆகியோரின் நிஜ நடிப்பு, கதையின் ஆழம், உலகளவிய திரைப்படத் தரம் ஆகியவை இந்த படத்தை ஒரு ஆர்ட்-ஹவுஸ் கிளாசிக்காக மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவ்வார திரையரங்குகளில் “வெள்ளகுதிர” ஒரு செரியஸ் சினிமா லவர்களுக்கான சிறப்பு பரிசு.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.