அப்புறம் என்னப்பா OTT-க்கு பார்சல் பண்ணிடலாமா.. டாப் ஹீரோக்களால் விழி பிதுங்கும் OTT நிறுவனங்கள்!

Thug Life: அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதைன்னு சொல்வாங்க, அப்படி தான் OTT தளங்கள் அதிக லாபத்திற்கு ஆசை பட்டு இப்போ கஜானாவை காலி செய்து கொண்டிருக்கின்றன. OTT நிறுவனங்களை கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என 2 வகையாக பிரிக்கலாம்.

நன்றாக வெற்றி பெற்ற திரைப்படங்கள், பழைய படங்களின் டிஜிட்டல் உரிமைகளை வாங்கி சம்பாதித்து கொண்டிருந்தார்கள்.

விழி பிதுங்கும் OTT நிறுவனங்கள்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் தியேட்டருக்கு மக்கள் போக முடியாத காரணத்தால் அப்போது தயாரிப்பு பணிகள் முடிந்திருந்த படங்கள் டிஜிட்டல் முறையில் ரிலீஸ் செய்யப்பட்டது.

அதன் பின்னர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே நான், நீ என போட்டி போட்டு கொண்டு OTT நிறுவனங்கள் படங்களின் டிஜிட்டல் உரிமையை வாங்க தொடங்கினார்கள். தயாரிப்பாளர்களும் OTT வியாபாரத்தை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்தார்கள்.

இப்படி OTT நிறுவனங்களும், சினிமாகாரர்களும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் போதே சினிமா ரசிகர்களுக்கு படங்களின் மீதான பார்வையும் மாறியது. பெரிய ஹீரோ, மாயாஜால வேலை இதெல்லாம் எடுபடாது, கதை நாளா இருந்தா தான் பார்ப்போம் என்று மாறிவிட்டார்கள்.

இதனால் டாப் ஹீரோக்கள், ஹிட் இயக்குனர்கள், பிரம்மாண்ட பட்ஜெட் என எதுமே எடுபடவில்லை. படங்கள் ரிலீஸ் ஆகி ஒண்டிரண்டு வாரங்களில் OTT பக்கம் கரை ஒதுங்கின.

லால் ஸலாம், இந்தியன் 2, கங்குவா எல்லாம் இந்த லிஸ்டில் தான் சேரும். இப்போது சமீபத்தில் கமலின் தக் லைஃப் படமும் இந்த லிஸ்டில் இணைந்து விட்டது. பேராசை தான் இவர்களுக்கு இப்போது பெரும் நஷ்டத்தை கொடுத்து கொண்டிருக்கிறது.