Coolie: ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்று சொல்வார்கள். இந்த விஷயத்தை மறந்து விட்டு ஏடாகூடமாக காசை அள்ளி வீசியிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பல மடங்கு லாபத்தை கொடுத்தது.
ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் கூலி படத்தை தைரியமாக சன் பிக்சர்ஸ் கையில் எடுத்ததற்கு காரணமும் இதுதான்.
ஆனால் கொஞ்சம் கூட யோசிக்காமல் படத்தின் மீது போட்ட பட்ஜெட் தான் இப்போது பிரச்சினைக்கு காரணமே.
அள்ளி வீசிய சன் பிக்சர்ஸ்
அதாவது கூலி படத்தின் மொத்த பட்ஜெட் 350 கோடி. ரஜினிகாந்தின் சம்பளம் 150 கோடி. லோகேஷ் கனகராஜுக்கு 50 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் புரொடக்ஷன் வேலைகளுக்கு 25 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.
ஒட்டு மொத்தமாக இந்த படத்தின் மீது 575 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஜெயிலர் படத்தை பொருத்தமட்டிலும் அந்த படத்தின் வசூல் 600 கோடியாக இருந்தது. தமிழ் சினிமாவின் அதிக வசூல் இது வரையிலும் இதுதான். தற்போது கிட்டத்தட்ட 575 கோடி பட்ஜெட்டில் படமே உருவாகி இருக்கிறது.
625 கோடி வசூலை தொட்டால் தான் இந்த படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றதாக ஏற்றுக் கொள்ளப்படும். 600 கோடி வசூல் என்பதே தமிழ் சினிமாவில் இமாலய சாதனையாக இருக்கிறது. தற்போது கூலி படத்தின் வசூல் 625 கோடியை தாண்டி வெற்றி படமாக வேண்டும் என்பதெல்லாம் மதில் மேல் பூனை என்ற நிலைமை தான்.