சாய் பல்லவி அடுத்த படம் மணிரத்னம் கூடத்தான்! அதிரவைத்த லேட்டஸ்ட் தகவல்!
மணிரத்னம் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன்முதல் முறையாக சாய் பல்லவிஇணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த பரபரப்பான செய்திதான்.
சினிமா உலகில் சில கூட்டணியைப் பற்றிய செய்திகள் கசிந்தாலே, ரசிகர்களின் மனதிற்குள் உற்சாக வானவேடிக்கைகள் வெடிக்க ஆரம்பித்துவிடும். அப்படியான ஒரு ‘வெயிட்டிங்’ அப்டேட்தான் தற்போது திரையுலக வட்டாரங்களில் தீயாய் பரவி வருகிறது.
அந்த செய்தி வேறு எதுவுமில்லை, தென்னிந்தியாவின் தனித்துவமான நடிகை சாய் பல்லவியும், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்னம் அவர்களும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்திற்காகக் கைகோர்க்கப் போவதாக வெளியாகி இருக்கும் தகவல்தான்!
சாய் பல்லவியின் பயணத்தை மற்ற நடிகைகளுடன் ஒப்பிட முடியாது. காரணம், ஒரு கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பொதுவான அளவுகோல்களை அவர் உடைத்தெறிந்தவர். மேக்கப் இல்லாவிட்டாலும், துளி கூட செயற்கைத்தனம் இல்லாமல், அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்குத் தனி ஜீவனைக் கொடுத்துவிடுகிறார்.
மீபகாலமாக, சாய் பல்லவி குறித்த ஒரு பரபரப்பான செய்தி திரையுலக வட்டாரங்களில் பரவி வந்தது. அதாவது, இந்திய சினிமாவின் இருபெரும் ஆளுமைகளான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள பிரம்மாண்டமான படத்தில், அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், இதுவரையில் அந்த தகவல் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழுவின் சார்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய நட்சத்திரங்கள் இணையும் படத்தில் சாய் பல்லவி நடிக்கிறார் என்ற வதந்தியே இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது உண்மையாகவே ஒரு மாபெரும் கூட்டணி அமையவிருக்கும் செய்தி, கோலிவுட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம், தனது அடுத்த படத்திற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் என்றும், அதில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் செய்திகள் கசிந்துள்ளன. 'பொன்னியின் செல்வன்' போன்ற வரலாற்றுப் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மணிரத்னம் அவர்களின் அடுத்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது.
இந்த புதிய படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக, தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை நிலைநிறுத்தி இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவல்தான், இந்தத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
மணிரத்னம், சாய் பல்லவி, விஜய் சேதுபதி என்ற இந்த ‘ட்ரீம் காம்போ’ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகத் தான் ஒட்டுமொத்த திரையுலகமும் காத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும், படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
