Ajith : 1999-ஆம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படம் அஜித்தின் கேரியரில் முக்கியமான படமாக கருதப்படுகிறது. வசந்த் இயக்கத்தில், ராஜிவ் மேனன் இசையில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக அஜித் மற்றும் ஷாலினி இருவரின் ஜோடி ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இந்த படம் அஜித் ரசிகர்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் க்ளாசிக் ஹிட் ஆகும்.
ஷாலினிக்கு கிப்ட்..
‘அமர்க்களம்’ படம் அஜித் மற்றும் ஷாலினி இருவரின் காதல் கதை தொடங்கிய படமாக ரசிகர்களிடம் பெரும் இடம்பிடித்தது. அஜித் அவர்களின் மனைவியும், பிரபல நடிகையுமான ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஷாலினிக்கு அஜித் ரசிகர்கள் வழங்கும் ஒரு சிறப்பான பரிசாக இந்த ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஒரு சிறப்பிடம் பெற்றுள்ள தல அஜித் நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ள மகிழ்ச்சியான தகவலை கேப்டன் பிரபாகரன் திரைப்பட விநியோகிஸ்தர் கார்த்திக் வெங்கடேசன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரீ-ரிலீஸின் முக்கிய காரணம்,
இன்றைய ரசிகர்களுக்காக, 4K ரீமாஸ்டரிங் செய்யப்பட்ட தரத்தில் படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களுக்கு ஒரு நோஸ்டால்ஜிக் அனுபவத்தை அளிக்கும். அஜித் மற்றும் ஷாலினியின் காதல் கதை ஆரம்பமான இடத்தை திரையில் மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது ரசிகர்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.
திருவிழா போல் கொண்டாடும் ரசிகர்கள்..
‘அமர்க்களம்’ ரீ-ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியவுடன், சமூக ஊடகங்களில் #Amarkalam, #Ajith, #Shalini போன்ற ஹாஷ்டேக்கள் டிரெண்டாகி வருகின்றன. அஜித் ரசிகர்கள் மட்டும் அல்லாமல், 90களில் வளர்ந்த சினிமா ரசிகர்களுக்கும் இது மிகப்பெரிய திருவிழாவாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாகவும் அமர்க்களம் அமைந்துள்ளது.
அதனால் இந்த படத்தை திருவிழா போல் கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த ரீ-ரிலீஸ், தமிழ் சினிமாவின் க்ளாசிக் படங்களை மீண்டும் கொண்டாடும் ஒரு நல்ல முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் அனைவரும் படம் வெளிவரும் தேதி அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.