சிம்புவின் “அரசன்” - நிஜ ரவுடி கதையா! யார் இந்த மயிலை சிவக்குமார்?
சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகி வரும் “அரசன்” திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப்ரோமோவில் சிம்பு கடுமையான ரவுடி கெட்டப்பில், வடசென்னை சாயலில் மாஸ் லுக்கில் தோன்றுகிறார். வெளியான சில மணி நேரங்களிலேயே “அரசன்” ட்ரெய்லர் ட்ரெண்டிங் #1-ஆக மாறியிருக்கிறது.
ஆனால் ரசிகர்களிடையே ஒரே கேள்வி எழுந்துள்ளது - “இந்த கதையின் உண்மை பின்னணி யார்?” அந்தக் கேள்விக்கு பதில் ஒன்று தான் - மைலாப்பூர் சிவக்குமார்.
யார் இந்த மைலாப்பூர் சிவக்குமார்?
மைலாப்பூர் சிவக்குமார்... அந்த பெயரே சென்னை நகரத்தில் ஒருகாலத்தில் நடுக்கம் ஏற்படுத்தியது. அவர் ஒரு “A-பிளஸ் ரவுடி” என போலீஸ் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். அவர்மீது கொலை, கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததாக கூறப்படுகிறது.
1997ஆம் ஆண்டு புகழ்பெற்ற ரவுடி தோட்டம் சேகர் கொல்லப்பட்ட சம்பவம் அப்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொலைக்கு பழி வாங்குவதற்காக, தோட்டம் சேகரின் மகன்கள் 24 ஆண்டுகள் காத்திருந்து, 2021ல் மைலாப்பூர் சிவக்குமாரை தாக்கி கொன்றனர்.
கொடூரமான பழிக்குப்பழி - 45 வெட்டுகள் கொண்ட மரணம்!
சிவக்குமார் கொல்லப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது. அவரது உடலில் 45 வெட்டுக்காயங்கள் இருந்ததாக போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை வெட்டியவர்கள், வெறும் கொலை நோக்கமின்றி, பழி தீர்க்கும் ஆத்திரத்துடன் தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
அவரை கொலை செய்ய 10 பேர் கொண்ட கும்பல் அசோக் நகரில் சுத்தி தாக்கி, “கண்ட துண்டமாக” வெட்டியதாக தகவல். 23 ஆண்டுகள் கழித்து தோட்டம் சேகர் கொலைக்கான பழி தீர்ந்தது என்று கூறப்படுகிறது.
மைலாப்பூர் சிவக்குமாரின் இருண்ட வாழ்க்கை
அவர் சில மாதங்களுக்கு முன்பே சிறையில் இருந்து வெளிவந்திருந்தார். ஒரு பெண்ணை உயிருடன் எரித்த வழக்கில் அவர் குற்றவாளியாக இருந்ததாக போலீஸ் தகவல். இப்படி பல கொடூர வழக்குகளில் ஈடுபட்ட இவரது கதை, “அரசன்” படத்திற்கான பின்புலமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
“அரசன்” – ரியல் லைஃப் இன்ஸ்பிரேஷனா?
சிம்பு நடித்து வரும் “அரசன்” கதாப்பாத்திரம் மைலாப்பூர் சிவக்குமார் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக சில சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. மற்றொரு பக்கம், இது “வடசென்னை ராஜன் யுனிவர்ஸ்”-இல் இடம்பெறும் கதை என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். எது உண்மை என்றாலும், அரசன் படம் உண்மை சம்பவங்களின் சாயலில் அமைந்த அதிரடியான கதையாக இருப்பது உறுதி.
வடசென்னை யுனிவர்ஸில் இணைகிறதா?
அரசன் ப்ரோமோவில் காட்டப்பட்ட சில காட்சிகள், வெற்றிமாறன் இயக்கிய “வடசென்னை” படத்துடன் தொடர்புடையதாக ரசிகர்கள் கூறுகின்றனர். சில கதாப்பாத்திரங்கள் “வடசென்னை” யிலிருந்து “அரசன்” வரை தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் “அரசன்” படம் வடசென்னை யுனிவர்ஸ்-இன் அடுத்த அத்தியாயமாக மாறும் வாய்ப்பும் இருக்கிறது.
இந்தப் படத்தின் திரைக்கதை வெற்றிமாறன் எழுதியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் ரியலிஸ்டிக் கதை சொல்லும் பாணியுடன், அனிருத் இசை இணைந்தால் - அதுவே “அரசன்” படத்தின் மிகப்பெரிய பலம் ஆகும். அனிருத் பிறந்தநாள் மற்றும் தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த ப்ரோமோவிற்கு ரசிகர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
சிம்புவின் “அரசன்” படம் வெளிவரும் வரை, “யார் இந்த மைலாப்பூர் சிவக்குமார்?” என்ற கேள்வி ரசிகர்களை துரத்திக்கொண்டே இருக்கும். உண்மை சம்பவங்களின் பின்னணியில், மாஸ் எமோஷன்களுடன் வடசென்னை யுனிவர்ஸில் அமைந்த இந்த படம், 2025 இல் வெளியானால் தமிழ் சினிமா வரலாற்றில் இன்னொரு மைல் ஸ்டோனாக மாறும் என்பதில் ரசிகர்கள் நம்பிக்கை வைக்கின்றனர்.
