சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கும் சிக்கல்.. மதராசி படத்தால் சத்தியஜோதி வெங்கட் பிரபுவுக்கு வைக்கும் செக்

மதராசி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு பிறகு அடுத்தடுத்து சிவகார்த்திகேயனின் இரண்டு ப்ராஜெக்ட்டுகள் ரெடியாகவிருக்கிறது ஆனால் அதற்கும் இப்பொழுது சில சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.

வெங்கட் பிரபு இயக்க சத்திய ஜோதி தயாரிக்கும் படத்திலும், சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருக்கார். இந்த இரண்டு படத்தையும் ஒரே சமயத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கொடுப்பதாக இருந்தார் ஆனால் இப்பொழுது வெங்கட் பிரபு படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வெங்கட் பிரபுவை அழைத்த சத்யஜோதி நிறுவனம், மதராசி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது. அதனால் இந்த ப்ராஜெக்டை தள்ளி வைக்கலாம் என கூறி இருக்கிறது. ஆனால் வெங்கட் பிரபு தரப்போ சிவகார்த்திகேயனை நீண்ட நாட்களாக பாலோ செய்து இதை கமிட் செய்துள்ளது.

இந்த படத்திற்கு வெங்கட் பிரபுவிற்கு 15 கோடிகள் சம்பளம் சிவகார்த்திகேயனுக்கு 40 கோடிகள். படத்தின் பட்ஜெட் எப்படியும் 100 கோடிகளை தாண்டி விடும். அதனால் இப்பொழுது சத்திய ஜோதி நிறுவனம் இந்த ப்ராஜெக்டில் இருந்து பேக் அடிப்பது போல் தெரிகிறது.

அது மட்டுமில்லாமல் இந்த படத்திற்கு அனிருத்தையும் கமிட் செய்து வைத்திருந்தனர் அவருக்கும் பெரும் தொகையை சம்பளமாக கொடுக்க வேண்டும். இப்படி பல காரணங்களால் இந்த படம் ஆரம்பிக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இப்பொழுது வெங்கட் பிரபுவும், சத்திய ஜோதியும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் பிராஃபிட் சேர் வாங்கிக் கொண்டால் படத்தை உடனே ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள். அதனால் சிவா கையில் தான் இருக்கிறது இந்த படத்தின் டேக் ஆப்.