Cinema : தென் இந்திய சினிமா எப்போதுமே மாஸ் ஹீரோ படங்களின் வசூலுக்கு பெயர் பெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் பெண் முன்னணி (Female Lead) படங்களும் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வசூல் சாதனை படைத்து வருவது திரையுலகின் மிகப்பெரிய மாற்றம். ரசிகர்கள் கதைக்கும், கதாநாயகிகளின் நடிப்புக்கும் மதிப்பளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இங்கே பெண் முன்னணி படங்களில் வசூலில் முதலிடம் பிடித்த படங்களின் பட்டியலை பார்ப்போம்:
லோகா (Lokha) – ₹100 கோடி+

தென் இந்திய திரையுலகில் ஹீரோயின்கள் மட்டுமே மையமாக நடித்த படங்களில் வசூலில் முதலிடத்தைப் பிடித்த படம் லோகா. வலுவான கதை, சண்டைக் காட்சிகள், நாயகியின் அசத்தலான நடிப்பு – இவை எல்லாம் சேர்ந்து லோகாவை இதுவரை ₹100 கோடியைத் தாண்டிய ஒரு பிளாக்பஸ்டராக மாற்றியது. இன்னமும் வசூலை பெற்று பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாநதி (Mahanati) – ₹90 கோடி
சாவித்திரி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட மகாநதி , கீர்த்தி சுரேஷின் கரியரில் ஒரு முக்கிய மைல்கல். ரெட்ரோ காட்சிகளும், உணர்ச்சி பூர்வமான கதை சொல்லலும், ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்தது. ₹90 கோடியை வசூலித்து பெண்கள் மையப்படங்கள் வெற்றிகரமாகும் என்பதை நிரூபித்தது. அனைவரும் மறக்க முடியாத படமாக விளங்குகிறது.
ருத்ரமாதேவி (Rudramadevi) – ₹86 கோடி

அனுஷ்கா ஷெட்டியின் மிகப்பெரிய வரலாற்று படம் ருத்ரமாதேவி, தென் இந்திய சினிமாவில் பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முதல் 3D வரலாற்று படம். ₹86 கோடியை வசூலித்த இந்த படம் தெலுங்கு சினிமாவில் பெண் முன்னணி படங்களுக்கு புதிய பாதையை திறந்தது.
அருந்ததி (Arundhati) – ₹70 கோடி
அனுஷ்காவின் கரியரை உயர்த்திய அருந்ததி, அதிரடி காட்சிகள், திகில் அம்சங்கள், சஸ்பென்ஸ் ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தது. ₹70 கோடியை வசூலித்த இந்த படம் ஹீரோயின்கள் ஒருவரே ஹீரோவாக நின்றாலும் பிளாக்பஸ்டர் அடிக்கலாம் என்று நிரூபித்தது.
பாகமதி (Bhagamathie) – ₹67 கோடி

மீண்டும் அனுஷ்காவின் மாயாஜாலம்! பாகமதி ஒரு ஹாரர்-த்ரில்லர் வகை படம். ₹67 கோடியை வசூலித்து, ரசிகர்களிடம் அனுஷ்காவின் மார்க்கெட்டை வலுப்படுத்தியது.
இந்த பெண் முன்னணி (Female Lead) படங்களில் அதிக வெற்றி படங்களை கொடுத்தவர் என்ற பெருமை அனுஷ்காவையே சேரும். இன்று வரை யாரும் தொட முடியாத ஒரு வலுவான கதாபத்திரத்தில் நடிக்க கூடிய நடிகையாக திகழ்கிறார் அனுஷ்கா.
முடிவாக..
இந்த 5 படங்களும் காட்டும் செய்தி ஒன்றே – தென் இந்திய சினிமாவில் பெண்கள் மையப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றிகளைப் பெறுகின்றன. ஹீரோ இல்லாமலேயே கதைக்கு ரசிகர்கள் வருகிறார்கள். கதை சொல்லும் முறை, நடிகைகளின் ஆற்றல், தொழில்நுட்ப தரம் – இவை அனைத்தும் சேர்ந்து இந்த படங்களை சாதனையாளர்களாக்கின.