சூர்யா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்! அந்த பிரபல மலையாள பட இயக்குனருடன் கூட்டணி போடும் சூர்யா

Cinema : தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு ஹாட் அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “ஆவேசம்” என்ற பிளாக்பஸ்டர் மலையாள திரைப்படத்தை இயக்கிய ஜித்து மாதவன், நடிகர் சூர்யாவுடன் கைகோர்க்கிறார் என்பதே அந்தச் செய்தி! மேலும், புது தலைமுறை இசையமைப்பாளர்களில் செம்ம லெவலில் இருக்கும் சுஷின் ஷ்யாம் இந்தப் படத்துக்கு இசையமைக்கப் போகிறார் என்பது ரசிகர்களிடையே இன்னும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா தற்போது தனது நடிப்பு மற்றும் தேர்வுகள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு கொண்டு சென்ற நடிகர்களில் ஒருவர். அவர் நடித்த “ஜெய் பீம்”, “சூரரைப் போற்று” போன்ற படங்கள் தேசிய, சர்வதேச ரீதியில் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட தரமான கதைத் தேர்வுகளில் இருக்கும் சூர்யா, ஜித்து மாதவன் போன்ற டாலண்ட் டைரக்டருடன் இணையப்போவதாக வந்திருக்கும் இந்த அப்டேட், ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது.

பான் இந்திய மக்களை கவர்ந்த ஆவேசம்..

மலையாளத்தில் வெளிவந்த “ஆவேசம்” படம், 2024ஆம் ஆண்டில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக பேசப்பட்டது. கேரளாவில் மட்டும் அல்லாமல் இந்திய அளவிலும் விமர்சகர்களிடம் இருந்து பாராட்டைப் பெற்ற இந்தப் படத்தின் கதைக்களம், திரைக்கதை, ஜித்து மாதவனின் டைரக்ஷன் அனைத்தும் செம்மையாக இருந்தது. இப்படத்தின் பின்னணி இசையை சுஷின் ஷ்யாம் அமைத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

மாபெரும் ஹிட் படத்தை கொடுக்க முடிவெடுத்துள்ள சூர்யா..

அந்த டீமை சூர்யா தனது அடுத்த திட்டத்திற்காக தேர்ந்தெடுத்திருப்பது, கதை சொல்லும் முறை மற்றும் இசை தரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், இணையத்தில் வெளியான இந்த தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் ஹைப் உருவாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் #Suriya, #JithuMadhavan, #SushinShyam போன்ற ஹேஷ்டாக்கள் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவை தரமான கதை சொல்லல் மற்றும் கச்சிதமான தொழில்நுட்பத்துடன் உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் சூர்யா முன்னிலை வகிக்கிறார். ஜித்து மாதவன், சுஷின் ஷ்யாம் போன்ற திறமையான மலையாள சினிமா கலைஞர்களுடன் அவர் இணைவது, இரு மொழி ரசிகர்களுக்கும் ஹிட் கேரண்டி என சொல்லலாம்.

படத்தின் பெயர், கதைக்களம், படப்பிடிப்பு தொடங்கும் தேதி உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தனது ரசிகர்களுக்கு எப்படியும் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என சூர்யா திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளார். கண்டிப்பாக தரமான படத்தை எதிர்பார்களாம்.