1. Home
  2. சினிமா செய்திகள்

தலைவர் 173-இல் இருந்து விலகினால் என்ன.? அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிசியான சுந்தர் C

thalaivar173-sundar-c

சுந்தர் C தலைவர் 173 விருந்து தவறவிட்டாலும், 100 கோடி பொருட்செலவிலான மூக்குத்தி அம்மன் 2, அரண்மனை 5 உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களால் மிகப்பெரிய டிமாண்டில் இருக்கிறார். விஷால், கார்த்தி உட்பட பல ஸ்டார்கள் அவரோடு பணியாற்ற காத்திருக்கின்றனர்.


தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி, ஆக்‌ஷன், ஹாரர் – எல்லா ஜானர்களிலும் மீண்டும் மீண்டும் ஹிட் கொடுத்து தன்னுடைய தனித்த இடத்தை பிடித்தவர் சுந்தர் C. இன்று கூட அவரைப் பற்றிய பேச்சு குறையவில்லை. சில சமயம் திட்டங்களில் மாற்றம் நடந்தாலும், அவர் மீது இருக்கும் மார்க்கெட், ஏற்படும் எதிர்பார்ப்பு, அவர் உருவாக்கும் படங்களுக்கு கிடைக்கும் பஸ்ஸ்  எல்லாம் இணைந்தால் அவர் தொடர்ந்து டிமாண்டில் இருக்கும் டாப் டைரக்டர் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

தலைவர் 173-ல் அவர் இறுதியில் டைரக்ட் செய்யவில்லை என்றாலும், அவர் மீது உள்ள நம்பிக்கை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை படம் வரிசைகள், படக்குழுக்கள் சொல்கின்றன. இந்நிலையில், சுந்தர் C கையில் தற்போது இருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் 100 கோடி ஸ்கேலுக்கு உயர்ந்து, செட் லெவல் மிகப் பெரிய அளவில் போகிறது என்ற தகவல் இன்னும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

2020-ல் வெளியான “மூக்குத்தி அம்மன்” படம் பெரிய ஹிட். நயன்தாராவின் காமெடி-தெய்வம் அவதாரம் ரசிகர்களை கவர்ந்தது. இப்போது அதன் சீக்குவல் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.

VFX மற்றும் கிராபிக்ஸ் வொர்க்கிற்காக ஹாலிவுட் டெக்னீஷியன்களும் இணைந்திருக்கிறார்கள். 2026 தீபாவளிக்கு ரிலீஸ் என்கிறார்கள். இந்தப் படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பேமிலி என்டர்டெய்னராக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர் C-யின் “அரண்மனை” தொடர் தமிழில் ஹாரர்-காமெடி ஜானருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அரண்மனை 4 சமீபத்தில் 100 கோடி கலெக்ஷன் செய்து சாதனை படைத்தது.

இப்போது அரண்மனை 5-க்கான ஸ்கிரிப்ட் வொர்க் மும்முரமாக நடக்கிறது. சுந்தர் C, தமன்னா மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளது. இந்தமுறை ஹாரர் எலமெண்ட்டை இன்னும் அதிகப்படுத்தி, புதிய லொகேஷன்களில் படமாக்க திட்டமிட்டுள்ளார். “அரண்மனை 5 ரசிகர்களுக்கு இன்னும் பெரிய சர்ப்ரைஸ் இருக்கும்” என சுந்தர் C சமீபத்திய இன்டர்வியூவில் சொல்லியிருக்கிறார்.

சுந்தர் C-யோடு பணியாற்ற ஆர்வம் காட்டும் ஹீரோக்கள் லிஸ்ட் நீள்கிறது. விஷாலுடன் ஏற்கனவே ஆம்பள போன்ற ஹிட் படங்கள் கொடுத்தவர். இப்போது மீண்டும் ஒரு ஆக்ஷன்-காமெடி படம் பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது.

கார்த்தியும் சுந்தர் C-யோடு இணைய ஆர்வமாக இருக்கிறார். ஆர்யாவும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் சுந்தர் C-யோடு கை கோர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல். இவர்களைத் தாண்டி சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி போன்றோரும் சுந்தர் C-யை அப்ரோச் செய்ததாக சொல்கிறார்கள்.இவ்வளவு டிமாண்ட் இருக்கும் ஒரு டைரக்டர் தமிழில் வேறு யாராவது இருக்காங்களா?

தலைவர் 173 விருந்து வந்து போகலாம், ஆனால் சுந்தர் C-யின் கைவசம் இருக்கும் ப்ராஜெக்ட்கள் தமிழ் சினிமாவையே பிஸியாக வைத்திருக்கின்றன. 100 கோடி “மூக்குத்தி அம்மன் 2”, ஹாரர் யூனிவர்ஸ் “அரண்மனை 5”, பல ஹீரோக்களின் அடுத்த படம் என அவரது டைரி நிரம்பியே இருக்கிறது.

தமிழ் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி தான். சுந்தர் C-யின் அடுத்த அடுத்த படங்கள் ஒவ்வொன்றும் பெரிய எக்ஸ்பெக்டேஷனை உருவாக்கி வருகின்றன. இனி வரும் ஆண்டுகள் சுந்தர் C-யின் ஆண்டுகளாகவே இருக்கும் என நம்பலாம்!

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.