Cinema : இந்தியாவின் தேசிய திரைப்பட விருதுகள் வருடந்தோறும் இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை அங்கீகரிக்கும் பெருமைக்குரிய விருதுகள். ஆனால், சில படங்கள் விமர்சக பாராட்டும், ரசிகர் வரவேற்பும் பெற்றிருந்தாலும், தேசிய விருது பட்டியலில் இடம் பெறாமல் போவது ரசிகர்களின் மனதில் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
‘அயோத்தி’ – இந்த படம் வெளியாகி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது போல நல்ல மையக்கருத்தை கோட்னு எடுக்கப்பட்டது. உணர்ச்சிகரமான கதைக்களத்துடன் சமூக கருத்துக்களை சித்தரித்த இந்த படம், ரசிகர்களின் மனதை கவர்ந்தது. ஆனாலும், தேசிய விருதுகளில் புறக்கணிக்கப்பட்டது சினிமா ரசிகர்களிடம் கேள்விகளை எழுப்பியது.

‘அநீதி’ – இத்திரைப்படம் தனது வலுவான சமூக செய்தி மற்றும் இயக்கத்தால் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றது. உண்மை சம்பவங்களை தழுவிய கதை, வலுவான திரைக்கதை ஆகியவை இருந்தாலும், விருது கிடைக்காதது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

‘போர்த்தொழில்’ – படத்தில் உள்ள அதனை காட்சிகளும் பாராட்டை பெற்றன.படமும் பாராட்டுதலுக்குரியது. இந்த மனதை உலுக்கும் த்ரில்லர் படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப நயம் ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்தது. ஆனால் தேசிய விருது பட்டியலில் இடம் பெறவில்லை.

‘சித்தா’ – பொது வாழ்க்கையில் நடைபெறும் குழந்தை பாலியல் துன்புறுத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். ஒவ்வொருவரது மனதையும் உலுக்கியது. படம் தனித்துவமான கதையம்சம் மற்றும் கலைநயத்தால் பாராட்டைப் பெற்றது. கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று நினைதித்திருந்த வேளையில், கிடைக்காமல் போனது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
விடுதலை – விடுதலை படமும் சமூக பிரச்சினைகளை முன்வைத்து எடுக்கப்பட்ட படம். என்னதான் அனுபவில்லாத நடிகர் சூரி என்றாலும் அவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த படம். கடைசியில் ஏமாற்றமே மிச்சம்.

இதே போல் எக்கச்சக்கமான படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் படங்கள் தேசிய விருது பட்டியலில் இல்லாவிட்டாலும், ரசிகர்களிடையே பெரும் மதிப்பையும் அன்பையும் பெற்றுள்ளன. தமிழ் சினிமாவின் பலத்தையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் இந்த படங்கள், எதிர்காலத்தில் தேசிய மட்டத்திலான அங்கீகாரம் பெறும் என்பதில் ரசிகர்கள் நம்பிக்கை வைக்கின்றனர்.
தமிழ் சினிமா உலகளவில் கலைநயத்திற்கும் கதைக்களத்திற்கும் அங்கீகாரம் பெற்று வரும் நிலையில், தேசிய விருதுகளில் புறக்கணிப்பு இருந்தாலும், இந்த படைப்புகள் ரசிகர்களின் இதயத்தில் என்றும் நிலைத்து நிற்க கூடியவை.