சுந்தர் சி இடத்தை நிரப்ப காத்து கிடக்கும் 5 டாப் இயக்குனர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் ரஜினி-கமல் காம்போ

சுந்தர் சி வெளியிட்ட அறிக்கையால் அடுத்து யார் இந்த இடத்தை பிடிக்க போகிறார் என்ற போட்டி நிலவி வருகிறது. இதனால் கமல் மற்றும் ரஜினியிடம் டாப் இயக்குனர்கள் கூறியுள்ள கதையை வைத்து தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளனர்.
ராஜ்கமல் தயாரிப்பில் ரஜினி ஹீரோவாக நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. ஆனால் பல காரணங்களுக்காக சுந்தர் சி இந்த படத்தை இயக்கப் போவதில்லை என்று வெளிப்படையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்த காம்போ என்னவாகும் என்று கேள்வி தற்போது கோலிவுட் வட்டாரத்தை சுற்றி வருகிறது. ஒரு சிலர் மீண்டும் சுந்தர் சி உள்ளே வரலாம் என்று கூறுகின்றனர். அதற்கான வாய்ப்பு இருவது சதவீதம் தான் உள்ளது. ஆனால் தற்போது இவர் இடத்தை நிரப்புவதற்கு 5 இயக்குனர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர்.
இதில் முதல் இடத்தில் ரஜினி மற்றும் கமலை இயக்கிய லோகேஷ் கனகராஜ் உள்ளார். கமலுக்கு விக்ரம் ஒரு மிகப்பெரிய Comeback கொடுத்தது, அதேபோல ரஜினிக்கு கூலி படம் பிரம்மாண்டமாக உருவாக்கினார் லோகேஷ். இவர்கள் இருவரையும் சரிக்கு சமமாக சமாளிக்கும் திறமை லோகேஷுக்கு இருக்கிறது என கோலிவுட் வட்டாராம் நம்புகிறது.
இரண்டாவதாக நெல்சன் இந்த வரிசையில் உள்ளார். ரஜினியை வைத்து ஜெய்லர், ஜெய்லர் 2ம் பாகம் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் தற்போது உள்ள ட்ரெண்ட் செட்டை எளிதாக கையாளக் கூடியவர். மூன்றாவது இடத்தில் கமர்சியல் ஹிட்டுக்கு பேர் போன வெங்கட் பிரபு உள்ளார்.
பிரம்மாண்டத்தின் உச்சம் பெற்ற இயக்குனர்கள்
நாயகன், தளபதி போன்ற பிரம்மாண்ட ஹிட் கொடுத்த மணிரத்தினம் இந்த காம்போவில் இணைந்தால் இன்னும் சுவாரஸ்யம் தான். கடைசி கட்டத்தில் எதுவுமே ஒர்க்அவுட் ஆகவில்லை என்றால் பாகுபலி போன்ற பிரம்மாண்ட ஹிட் கொடுத்த ராஜமௌலியும் இவர்கள் காம்போவில் கதை கூறியதாக தெரியவந்துள்ளது.
எது எப்படியோ ரஜினி கமல் இணைந்தாலே அது வரலாற்று சிறப்புமிக்க படமாக அமையும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. சுந்தர் சி பகிரங்கமாக வெளியிட்ட இந்த அறிக்கையால் கோலிவுட் வட்டாரமே அதிர்ச்சியில் உள்ளது. விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

