1. Home
  2. சினிமா செய்திகள்

களவாணி மாதிரி விமல் எடுத்த அவதாரம்.. ஒர்க் அவுட் ஆகுமா.?

களவாணி மாதிரி விமல் எடுத்த அவதாரம்.. ஒர்க் அவுட் ஆகுமா.?

விமல் : பண்ணங்கொம்பு என்ற ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்த விமல் இன்று தமிழ் சினிமாவில் ஒரு பிரபல ஹீரோவாக இருக்கிறார். விமல் தனது சினிமா கனவை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும்போது 2010-இல் களவாணி படத்தில் கிராம பின்னணியில் நடிக்க தேர்வாகிறார்.

இப்படத்தில் விமல் மற்றும் ஓவியாவின் காம்போ நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் கஞ்சாகருப்பு மற்றும் சரண்யாவின் காமெடிகள் இப்படம் மேலும் வெற்றியடைந்ததற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

விமலின் விடாமுயற்சி :

அதன்பின் வாகை சூட வா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, மன்னர் வகையறா போன்ற படங்களில் நடித்து விடாமுயற்சியால் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார் விமல்.

கிராமப்புற கதை!

தமிழ் சினிமாவிலேயே கிராமப்புற கதையில் நல்ல வெற்றியை கொடுத்தவர் விமல் மட்டும்தான். தற்போது அர்ஜித் வினாயகா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் கிராமப்புற படக் கதையில் கமிட்டாகியுள்ளார் விமல். இப்படம் முழுவதும் காமெடி மற்றும் குடும்பம் சார்ந்த கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

கிராமப்புற பாணியில் உருவாகும் இப்படத்தின் இயக்குனர் யார் என்று இன்னும் அறியப்படவில்லை. "பசுமை மற்றும் பழமை" நிறைந்த நகைச்சுவை படத்தில் விமல் நடிப்பதால் படம் வெற்றியடையும் என எதிர்பார்ப்புடன் பூஜையை தொடங்கி இருக்கிறார்கள்.

இன்று (ஜூன் 18). காலையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.