Suriya: நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்துக்கு இணையாக தன்னுடைய சினிமா பாதையை வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருந்தார் சூர்யா. ஆனால் சமீப காலமாக சூர்யாவுக்கு தமிழ் சினிமாவில் எதுவுமே சாதகமாக இல்லை.
இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டாலும், இன்னொரு பக்கம் உண்மையிலேயே சூர்யா தான் மிகப்பெரிய காரணமாக இருக்கிறார். சூர்யா தேர்ந்தெடுக்கும் கதை தான் அவருக்கு சாதகமாக அமையவில்லை.
சூர்யாவின் தொடர் தோல்விகள்
இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். கங்குவா படம் கதை கேட்கும்போதே சூர்யாவுக்கு இது நமக்கு ஏற்ற படமில்லை என்பது தெரிந்திருக்கும். படத்தின் பட்ஜெட் அவ்வளவு கோடியை தாண்டும்போது சூர்யா யோசித்து இருக்க வேண்டும்.
ஊரான் வீட்டு காசு தானே என்று மங்களம் பாட நினைத்தால் இதுதான் நிலைமை. சூர்யாவுக்கு காக்க காக்க, வேல் போன்ற கமர்சியல் படங்கள்தான் என்னைக்கும் கை கொடுத்து இருக்கிறது. ஜெய்பீம் மற்றும் சூரரை போற்று படங்கள் OTT தளங்களில் ரிலீசானதால் அதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
சூர்யா தனக்கு எது வரும் என்பதை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி கதையை இனி தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சம்பளம் அதிகமாக கொடுத்தால் போதும் என்று நடிக்க ஆரம்பித்தால் அவருடைய கேரியரே மொத்தமாக முடிந்து விடும் என பேசி இருக்கிறார்.