1. Home
  2. சினிமா செய்திகள்

உன் உடம்புல இரத்தம் சூடா இருக்கு, சண்டை செஞ்சி சம்பவம் பண்ணும் ஜெய்.. மிரளவிடும் கருப்பர் நகரம் டீசர்

உன் உடம்புல இரத்தம் சூடா இருக்கு, சண்டை செஞ்சி சம்பவம் பண்ணும் ஜெய்.. மிரளவிடும் கருப்பர் நகரம் டீசர்
ஜெய்யின் நடிப்பில் உருவாகி இருக்கும் கருப்பர் நகரம் படத்தில் டீசர் வெளியாகி இருக்கிறது.

Karuppar Nagaram: நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர்தான் கோபி நயினார். இவர் இப்போது கருப்பர் நகரம் என்ற வித்தியாசமான கதைக்களத்துடன் ஒரு படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

சமீபகாலமாக வடசென்னையை மையமாக வைத்து நிறைய படங்கள் வெளியான நிலையில் இப்போது அதேபோன்று கதையில் தான் கருப்பர் நகரம் படமும் உருவாகி இருக்கிறது. இப்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த டீசரின் தொடக்கத்திலேயே எம்ஜிஆர் பாடல் ஒலிக்கிறது.

முழுக்க முழுக்க வடசென்னை பகுதியில் அவர்களின் சாயலில் பக்காவாக இயக்குனர் படத்தை உருவாக்கி இருக்கிறார். மேலும் உடம்பில் ரத்தம் சூடா இருக்கிற வரைக்கும் தான் சண்டை போட முடியும் என தெறிக்கவிடும் வசனங்களும் கருப்பர் நகரம் டீசரில் இடம் பெற்று கவனத்தை பெற்றிருக்கிறது.

ஜெய் சமீபகாலமாக ஹிட் படங்கள் கொடுக்க திணறிக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் அவருடைய நடிப்பில் வெளியான தீரா காதல் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது கருப்பர் நகரம் படத்தில் ஜெய்யின் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்கும் என்பது டீச்சரை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இது போன்ற கதைகளும் ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே காக்கா முட்டை, வடசென்னை போன்ற பல வித்தியாசமான கதைக்களத்தில் நடித்திருக்கிறார். ஆகையால் விஜய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்குமே கருப்பர் நகரம் படம் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.