சிம்பு வெற்றிமாறன் கூட்டணிக்கு ஏற்பட்ட சிக்கல்.. சைலண்டாக இருக்கும் தயாரிப்பாளர்

இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் மட்டும் வெற்றி இல்லை, எடுக்கக்கூடிய படங்களிலும் வெற்றியை பெறக்கூடிய அளவிற்கு தனித்துவமானவர். அதனால் தான் அவர் எடுக்கக்கூடிய படங்களுக்கு எக்கச்சக்கமான விருதுகள் கிடைக்கிறது. கடைசியாக எடுத்த விடுதலை 1 மற்றும் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிகளை கொடுத்து மிகப்பெரிய பாராட்டுக்களும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் முதன்முதலாக சிம்புவுடன் கூட்டணி வைப்பதற்கு தயாரானார். அந்த வகையில் சிம்பு 49 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். சிம்பு நடிப்பில் கடைசியாக வந்த தக் லைஃப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை, வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோற்றுப் போய்விட்டது.

சிம்பு வெற்றிமாறன் கூட்டணி

இதனால் அடுத்த வெற்றிக்கு தயாரான சிம்புவுக்கு கிடைத்த பொக்கிஷம் தான் வெற்றிமாறன். இதனால் சிம்பு ரசிகர்கள் அனைவரும் எப்பொழுது இவர்களுடைய வெற்றியை பார்க்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிம்பு படம் என்றாலே ஏகப்பட்ட பிரச்சனைகளையும் சிக்கல்களையும் சந்திப்பது வழக்கமாக இருக்கிறது.

ஆரம்பமே சிக்கலான கதை

அதே மாதிரி ஆரம்பிக்கப் போற படத்திலும் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது படப்பிடிப்பு ஆரம்பிக்கும் பொழுது அதற்கான செட்டுகள் போட வேண்டும் என்பதால் அதற்கு கிட்டத்தட்ட 20 கோடி செலவாகும் என்று சொன்னதும் தயாரிப்பாளர் மிரண்டு போயிருக்கிறார். செட்டுக்கே20 கோடி என்றால் மற்ற செலவெல்லாம் என்ன ஆகும் என்று யோசித்த நிலையில் தயாரிப்பாளர் கணக்கு போட்டு பார்த்திருக்கிறார்.

simbu
simbu

சைலன்டான தயாரிப்பாளர்

அதாவது எப்படியும் சிம்புக்கு 50 கோடி கொடுக்கணும், படம் எடுப்பதற்கு 50 கோடி, இயக்குனருக்கு இருபது கோடி என்றால் கிட்டத்தட்ட 120 கோடிக்கு மேல் ஆகிவிடுமே என்று யோசித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு செட்டு போடுவதற்கு ஓகே சொல்லாமல் அமைதியாக இருந்திருக்கிறார். ஆனால் சிம்பு, தயாரிப்பாளரின் கஷ்டத்தை புரிந்து கொண்டு நாம் செட்டு போடுவதற்கு பதிலாக நேரடியாக இடத்திற்கு சென்று படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.

சிம்பு கொடுத்த ஐடியா

ஆனால் இதிலும் சிக்கல் இருக்கிறது, அதாவது கூட்ட நெரிசல் மற்றும் பொதுமக்கள் முன்னாடி படப்பிடிப்பு ஆரம்பித்தால் ஏகப்பட்ட பிரச்சனைகளும் வரலாம் என்று இதற்கும் பதில் சொல்லாமல் தயாரிப்பாளர் சைலண்டாக இருக்கிறார். இதனால் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமல் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்குள் வெற்றிமாறன் கொடுக்கும் இன்டர்வியூகளில் இப்படத்தை பற்றி பேசிக் கொண்டே வருகிறார்.

வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்

அந்த வகையில் வெற்றிமாறன் கொடுத்த அப்டேட் என்னவென்றால் சிம்பு 49 முழுக்க முழுக்க தனுஷ் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படத்தின் கதை அம்சமாக இருக்கும் என்று கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்நிலையில் வெற்றிமாறன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் சிம்பு 49 திரைப்படம் 5 எபிசோடுகளாக எடுக்கப்படும்.

இரண்டு பாகத்திற்கு தயாராக இருக்கும் கதை

ஆனால் அதில் முதல் எபிசோடு மட்டுமே சிம்பு கேட்டிருக்கிறார், இதற்கு மட்டுமே கதையை முடித்திருப்பதாகவும் வெற்றிமாறன் கூறி இருக்கிறார். அத்துடன் சிம்பு 49 இரண்டு பாகங்களாக உருவாகும் என்று வெற்றிமாறன் கூறியிருக்கிறார். தற்போது இப்படத்திற்காக எல்லா விஷயமும் தயாராகிய நிலையில் தயாரிப்பாளர் யோசித்துக்கொண்டு பின்வாங்கியதால் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமல் இழுத்தடிக்கிறது.

krishnaveni

Krishnaveni

கிருஷ்ணவேணி – கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். திரைப்பட செய்திகள், விமர்சனங்கள், பேட்டிகள் மற்றும் சினிமா உலகின் சமீபத்திய அப்டேட்களை வாசகர்களிடம் கொண்டு செல்லும் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். எளிமையான, வாசகர்களை ஈர்க்கும் எழுத்து பாணி இவரது சிறப்பம்சமாகும்.

View all posts →