1. Home
  2. சினிமா செய்திகள்

த்ரிஷா, நயன்தாராக்கு கூட கிடைக்காத வாய்ப்பு.. நாட்டாமை பொண்ணு கால்ஷீட்டை லாக் பண்ணிய ஆஸ்கார் இயக்குனர்!

த்ரிஷா, நயன்தாராக்கு கூட கிடைக்காத வாய்ப்பு.. நாட்டாமை பொண்ணு கால்ஷீட்டை லாக் பண்ணிய ஆஸ்கார் இயக்குனர்!

Varalakshmi Sarathkumar: கொடுக்கிற தெய்வம் கூரைய பிச்சுகிட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க. அப்படி ஒரு விஷயம் தான் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு நடந்திருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமாகி பின்னர் கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் பக்காவாக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

வரலட்சுமி ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று சொன்னதற்கு அவருடைய அப்பா சரத்குமார் மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அந்த சரத்குமார் பெருமைப்படும் அளவுக்கு தற்போது வரலட்சுமிக்கு வாய் போன்று வந்திருக்கிறது.

ஹாலிவுட் படத்தில் வரலட்சுமி

தமிழ் சினிமாவில் இருந்து ரஜினி, கமல், தனுஷ், நெப்போலியன், மாதவன் போன்ற நடிகர்கள் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால் நடிகைகளை பொறுத்த வரைக்கும் பாலிவுட் என்பதே அவர்களுக்கு மிகப்பெரிய கனவு தான்.

நயன்தாராவே ஒரு பாலிவுட் படத்தில் நடித்துவிட்டு அடுத்த வாய்ப்பு கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அதுவும் அகாடமி விருது பெற்ற இயக்குனர் சந்திரன் ருட்னம் இயக்கத்தில் பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் RIZANA-A Caged Bird என்னும் படம் தான் இது.

த்ரிஷா, நயன்தாராக்கு கூட கிடைக்காத வாய்ப்பு.. நாட்டாமை பொண்ணு கால்ஷீட்டை லாக் பண்ணிய ஆஸ்கார் இயக்குனர்!
Varalakshmi with RIZANA-A Caged Bird movie team

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஸ்ரீலங்காவில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவு நனவாகி விட்டதாக தற்போது வரலட்சுமி தெரிவித்திருக்கிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.