உஷாரா முழித்துக் கொண்டு விக்ரம் ஆடப்போகும் ஆட்டம்.. சியான் லைன் அப்பில் அடுத்தடுத்து 3 படங்கள்

சமீப காலமாக விக்ரம் ஏறும் படிக்கட்டுகள் அனைத்தும் சருக்கள்களாகவே அமைகிறது. அவர் ஒரு தரமான ஹிட் படம் கொடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்களான் மற்றும் வீர தீர சூரன் படங்களும் நல்ல வரவேற்பை பெறவில்லை.

இப்பொழுது பல நல்ல டைரக்டர்களை விக்ரம் தவறவிட்டதாக தெரிகிறது. இது எனக்கு உண்டான கதை இல்லை, என் ரசிகர்கள் என்னை இப்படித்தான் திரையில் பார்க்க விரும்புவார்கள் என பல காரணங்களை கூறி வாய்ப்புகளை வீணடித்து வருகிறார்.

தற்போது அடுத்தடுத்து 3 பிராஜெக்ட்களை கமிட் செய்துள்ளார் நல்ல தரமான 3 இயக்குனர்களை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார். இளம் இயக்குனர்களுடன் டிராவல் செய்ய திட்டம் போட்டு சரியான கதைகளை டிக் அடிக்கடித்துள்ளார்.

ராம்குமார்: ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் உடன் ஒரு படம் பண்ண போகிறார். ஏற்கனவே இந்த கதைக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம் விக்ரம். ராட்சசன், முண்டாசுப்பட்டி போன்ற படங்களை இவர் இயக்கியிருக்கிறார், ஆனால் ராட்சசன் படத்திற்குப் பிறகு பல வருடங்கள் இவர் இயக்கவில்லை.

விஷ்ணு இடவன்: லோகேஷ் கனகராஜ் இடம் அசிஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இப்பொழுது நயன்தாரா மற்றும் கவினை வைத்து ஹாய் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். லியோ, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வேலை செய்துள்ளார், இவருக்கு கால் சீட் கொடுத்திருக்கிறார் விக்ரம்.

ஆகாஷ் பாஸ்கரன்: ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஒருவருக்கும் விக்ரம் கால் சீட் கொடுத்திருக்கிறார். விக்ரம் இதுவரை எந்த ஒரு புதுமுக இயக்குனருடனும் வேலை செய்ததில்லை ஆனால் கதை பிடித்து போகவே இவர் இந்த படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.