SK-வால் கூட்டிய பஞ்சாயத்து! அபத்தமான கேள்விகளால் விமலை சீண்டிய மீடியா!
'பசங்க', 'களவாணி', 'விலங்கு' போன்ற வலுவான வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் விமலை, சமீபத்திய பட புரமோஷன் பேட்டிகளில் சில ஊடகங்கள் கையாண்ட விதம் குறித்துக் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. நடிகர்களின் வெற்றி, தோல்விகள் மற்றும் ஒப்பிடுதல்களை மையமாக வைத்து அபத்தமான கேள்விகளைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் விமலிடம் இருந்து இது போன்ற பதிலடிகள்தான் வரும் என்றும் தயாரிப்புத் தரப்பினரே விவாதிக்கின்றனர்.
நடிகர் விமல் ஒரு வலுவான நடிப்புப் பின்னணி கொண்டவர். 'கூத்துப்பட்டறை' போன்ற நடிப்புப் பயிற்சிப் பள்ளியிலிருந்து வந்தவர். மேலும், அவர் நடித்த 'பசங்க', 'களவாணி', 'வாகை சூடவா', 'தேசிங்கு ராஜா' மற்றும் சமீபத்திய ஓடிடி வெற்றியாக அமைந்த 'விலங்கு' வெப் சீரிஸ் என அவருக்கு என்று ஒரு வெற்றிப் பட்டியல் உண்டு. இருந்தும், அவர் புதிய படம் வெளியிடும் சமயங்களில், அவரைச் சில ஊடகங்கள் கையாள்வது தரமற்று இருப்பதாகக் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.
விமலிடம் நேர்காணல் எடுக்கும்போது, அவரது படப் பயணத்திற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்பது அபத்தமானது. அவரை ஒரு நகைச்சுவை நடிகரின் பெயரைக் குறிப்பிட்டு ஒப்பிடுவது போன்ற தரம் தாழ்ந்த அணுகுமுறையில் பேட்டி எடுப்பது மிகவும் தவறு. இதற்கு முன்பும் சில பேட்டிகளில் இதுபோல விமல் தனிப்பட்ட முறையில் சீண்டப்பட்டபோது, அவர் அதற்குத் தகுந்த பதிலடிகளைச் சாதுரியமாகக் கொடுத்து வந்துள்ளார்.
இந்தத் தரமற்ற கேள்விகளில் உச்சக்கட்ட அபத்தம் என்னவென்றால், விமலை நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒப்பிடுவது தான். "சிவகார்த்திகேயன் இன்று பெரிய இடத்திற்குப் போய்விட்டார், ஆனால் நீங்கள் ஏன் இன்னும் போகவில்லை?" போன்ற கேள்விகள் அபத்தமானவை. சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்களாக இருந்தாலுமே, அனைவருக்கும் தங்கள் திரைப் பயணத்தில் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்த 'சீசன்' வந்தே போகும்.
மூத்த நடிகரிடம் கேட்க துணிவு உண்டா? - பதிலடிக்குக் காரணம் இதுதான்!
நடிகர்களின் பயணம் என்பது வயது கடந்த ஒன்று. ஒரு நடிகர் 60 அல்லது 70 வயதில் கூடத் தனக்கான மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தனக்குப் பெயரை வாங்கலாம். அப்படியிருக்கையில், ஒரு நடிகரின் தற்போதைய வெற்றி, தோல்விகளை மட்டுமே மனதில் வைத்துக் கேள்விகளைக் கேட்பது என்பது சினிமா துறையில் உள்ள மூத்த நடிகர்கள் அல்லது நடுத்தர நடிகர்களை அவமதிப்பதாகும்.
உண்மையில், இந்த அபத்தமான கேள்விகளை வேறு சில மூத்த நடிகர்களிடமோ அல்லது தற்போது முன்னணி நடிகர்களாக உள்ளவர்களிடமோ கேட்கச் சில ஊடகங்களுக்குத் துணிவு இருக்காது. அப்படியே கேட்டாலும், அவர்கள் உடனே எழுந்து வெளியே சென்று விடுவார்கள் அல்லது நேரடியாகக் கண்டனம் தெரிவிப்பார்கள். இந்தக் கேள்விகளை விமலிடம் மட்டும் திரும்பத் திரும்பக் கேட்பதன் நோக்கம், படத்தின் புரமோஷனை விட, வதந்திகளை வைரலாக்குவதுதான்.
இனிமேலாவது, ஊடகங்கள் ஒரு நடிகரின் தற்போது ரிலீஸ் ஆகப்போகும் படம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் குறித்த கேள்விகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் படத்தின் புரமோஷனை விட, விமலின் பதிலடி வீடியோக்கள்தான் சமூக ஊடகங்களில் சர்ச்சையாக வைரலாகி, தயாரிப்பாளருக்கோ அல்லது உங்களுக்கோ எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும். விமல் நீங்கள், "இதே கேள்விகளை வேறு பிரபல ஹீரோக்களிடம் கேட்டு விட்டு வாருங்கள், பிறகு பதில் தருகிறேன்" என்று சொல்லி, உங்களைத் தாழ்த்திக் கொள்ள நீங்களே வாய்ப்பளிக்காமல் தவிர்க்கலாம்.
