தலைவர்173-க்கு இசை அமைப்பவர் யார்? வைரலாகும் தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமாக இருக்கும் ‘தலைவர் 173’ குறித்து புதிய தகவல் ஒன்று சினிமா வட்டாரத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது நிறைவேற்றப்பட்டால், ரஜினிகாந்த், அனிருத் இணைப்பு இதில் ஆறாவது முறையாக அமையும்.
இப்படத்தை இயக்கவிருப்பது ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலக்கிருஷ்ணன். ஆரம்பத்தில் அவர் STR-க்கு ஒரு கதையைக் கூறியிருந்தாலும், ‘தலைவர் 173’க்கான ஸ்கிரிப்ட் முற்றிலும் புதிய கதையாம் என்றும், ரஜினிகாந்துக்கு dedicated-ஆக எழுதப்பட்ட கதை என்று கூறப்படுகிறது. தற்போது pre-production வேலைகள் முன்னேறி வருவதாகவும் தகவல்.
ரஜினி, அனிருத் combo இதுவரை நட்சத்திரத்திற்கான மிகப் பெரிய ஹிட்களைத் தந்துள்ளது. பேட்ட, ஜெயிலர் போன்ற படங்களில் அனிருத் கொடுத்த BGM மற்றும் பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தன. இதன் தொடர்ச்சியாக ‘தலைவர் 173’க்கும் அனிருத் இசையமைப்பார் என்ற தகவல் வெளிவந்திருப்பதால், ரசிகர்கள் ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாவதென காத்திருக்கப்படுகிறது.

