Cinema : மலையாள சினிமா எப்போதுமே தனித்துவமான கதைகள், கலைநயம் மற்றும் வித்தியாசமான தொழில்நுட்பங்களை கொண்டு பார்வையாளர்களை கவர்ந்து வந்துள்ளது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள ‘Lokha Chapter 1’ திரைப்படம் அந்த உயரத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. வெறும் ₹30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், பான் இந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறைந்த பட்ஜெட்-ல் உலகத்தரம்..
பலரும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகும் படங்கள் என்றால் அதிக பட்ஜெட், பிரம்மாண்ட செட், CGI என நினைப்பது வழக்கம். ஆனால் ‘Lokha Chapter 1’அந்த கருத்தை முறியடித்துள்ளது. சினிமாவில் தரமும் கதை சொல்லும் திறனும் தான் முக்கியம் என்பதை இந்த படம் நிரூபிக்கிறது. இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது திறமையைக் கொண்டு குறைந்த பட்ஜெட்டிலேயே உலகத் தரமான காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.
‘Lokha Chapter 1’ படத்தின் கதை, கதாபாத்திரங்கள் மற்றும் VFX தரம் ரசிகர்களிடையே பரவலாக பேசப்படுகிறது. பல ஹாலிவுட் படங்களின் அளவுக்கு ஒப்பிடக்கூடிய தரம் மலையாள சினிமாவில் உருவானது பெருமைக்குரிய விஷயம். பான் இந்திய ரிலீஸில் தென்னிந்திய மாநிலங்களுடன், வடஇந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அதிக பட்ஜெட்டில் எடுத்த படங்களை பார்த்தும் கூட கிடைக்காத திருப்தி, இந்த படத்தை பார்த்தவனுடன் கிடைத்து விட்டது என்றும் மக்கள் கூறியுள்ளனர். அதுவும் இந்த படம் வெறும் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்றவுடன் அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சற்று ஆச்சரியமாகவே இருந்தது. ‘கல்யாணி ப்ரியதர்சன்’ இந்த படத்தை தன் நடிப்பின் மூலம் தூக்கி நிறுத்தியுள்ளார்.
சூப்பர் பவர் கொண்ட பெண்ணாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார், இது ஒரு யூனிவெர்ஸ் படம் போல உருவாகியிருப்பது மக்களை கவர்ந்துள்ளது. கல்யாணி ப்ரியதர்ஷனின் பறக்கும் சண்டைக்காட்சிகள், காமெடிக்கு பஞ்சம் இல்லாத கதை, படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவு வரை இருக்கும் எதிர்பார்ப்பு, இதெல்லாம் படத்தின் பிளஸ்.
பான் இந்திய அளவில் மலையாள சினிமா..
சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ‘Lokha Chapter 1’ குறித்து பாராட்டுக்களை பொழிந்து வருகின்றனர். “பட்ஜெட் மட்டுமல்ல, கலைநயம் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது” என்று பலரும் புகழ்ந்துள்ளனர். மலையாள சினிமாவுக்கு இது ஒரு புதிய மைல்கல் என்று ரசிகர்களும் விமர்சகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இயக்குனர்களுக்கு புது நம்பிக்கையளித்த Lokha..
இந்த வெற்றியின் மூலம், குறைந்த செலவில் கூட உலகத் தரப்படங்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்திய சினிமா உலகம் பெற்றுள்ளது. ‘Lokha Chapter 1’ சினிமாவின் வெற்றிக் கதை, எதிர்கால இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெரிய உந்துசக்தியாக இருக்கும். குறைந்த பட்ஜெட்டில் எடுத்தாலும் கூட மன நிறைவான ஒரு படத்தை மக்களுக்கு கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது இந்த படம்.