தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பல நடிகர்கள் ஒரு சில படங்களால் புகழின் உச்சத்திற்கு சென்று விட்டு அதன் பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் போய் உள்ளனர். பின்பு ஒரு சில வருடங்கள் கழித்து தங்களுக்கு சாத்தியமான கதையை மட்டும் தேர்ந்தெடுத்து தற்போது சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர்.
அரவிந்த்சாமி: சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த அரவிந்த்சாமி ரோஜா மற்றும் பாம்பே போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. அதன் பிறகு வெளியான ஒரு சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் சினிமா விட்டு சில காலங்கள் விலகினார். பிறகு மோகன்ராஜ் தனி ஒருவன் என்ற படத்திற்கு அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க வைத்து மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுக் கொடுத்தார். தற்போது ஒரு சில படங்களில் அரவிந்த்சாமி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அருண் விஜய்: சினிமாவின் ஆரம்ப காலத்தில் மாஞ்சா வேலு மற்றும் தடையறத் தாக்க போன்ற தோல்விப் படங்களை மட்டுமே கொடுத்து வந்த அருண் விஜய்க்கு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றார். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டபெற்றதையடுத்து தற்போது மாஃபியா போன்ற படங்கள் மூலம் வெற்றிகளை கொடுத்து வருகிறார்.

மாதவன்: அலைபாயுதே படம் வெளிவந்த காலத்தில் மாதவனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை அந்த அளவிற்கு இவர் மீதான எதிர்பார்ப்பும் மற்றும் படத்தின் மீதான வரவேற்பும் இருந்தது. யாவரும் நலம் மற்றும் மன்மதன் அன்பு போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வி அடைந்தன. பின்பு இவர் எங்கே போனார் என்று கூட தெரியவில்லை.
அதன் பிறகு ஒரு சில வருடங்கள் கழித்து இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதம் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
ராஜ்கிரண்: தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் வெற்றி படங்களை கொடுத்தவர் ராஜ்கிரண். அதன் பிறகு முனி, சண்டக்கோழி மற்றும் காவலன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று வந்தார்.
அதன் பிறகு சினிமாவை விட்டு சில காலங்கள் விலகியிருந்தார். ஆனால் தனுஷ் இயக்குனர் ஆவதற்காக ராஜ்கிரண்னிடம் பவர்பாண்டி கதையை சொல்லி அவரிடம் பாராட்டை பெற்று படத்தை இயக்கினார். இப்படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது ராஜ்கிரன் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சில முக்கியமான படங்களில் நடித்து வருகிறார்.

சத்யராஜ்: ரஜினி மட்டும் கமலுக்கு போட்டியாக பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற சத்யராஜ் அதன் பிறகு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்பு நடிப்பிற்கு முழுக்கு போட்ட சத்யராஜ் பாகுபலி என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய பாராட்டைப் பெற்று உலக அளவில் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் ஒரு சில முக்கியமான படங்களை மட்டும் தேர்வு செய்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல் ஒரு சில நடிகர்களும் தற்போது சினிமா ரீ என்ட்ரி கொடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.