வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்தியன் 2 படத்தில் ஷங்கருடன் மீண்டும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த களேபரம்

ஷங்கர் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் கூட்டணியில் ஹிட் ஆன இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தொடங்கியது. இந்த படத்தை லைகா ப்ரொடக்சன் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் முடிந்திருந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த எதிர்பாராத விபத்தினால் படப்பிடிப்புக்கான வேலைகள் அத்தனையும் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா ஊரடங்கு வேறு வந்ததால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த படத்தின் வேலைகள் முடங்கியிருந்தன.

Also Read: கிரேசி மோகனால் வெற்றி கண்ட கமலின் 5 படங்கள்.. ஒவ்வொன்னும் வேற ரகம்!

இந்நிலையில் கடந்த மாதம் இந்தியன் 2 படத்திற்கான பூஜை மறுபடியும் போடப்பட்டு சூட்டிங் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கிடையில் இயக்குனர் சங்கர் ராம்சரண் தேஜா, கியாரா அத்வானியை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்க ஆரம்பித்திருந்தார். எனவே ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் சூட்டிங் என படு பிசியாக இருக்கிறார்.

கமலஹாசனும், ஒரு பக்கம் அரசியல் மற்றும் பிக்பாஸ் என பிசியாக இருக்கிறார். இவர்கள் இருவருமே பிசியாக இருப்பதால் இந்தியன் 2 சூட்டிங் ஸ்பாட்டே கொஞ்சம் அதிரி புதிரியாக சென்று கொண்டிருக்கிறது. இப்போது சூட்டிங் பிரசாத் லேப்பில் பிரம்மாண்ட செட் போட்டு நடந்து கொண்டிருக்கிறது. அங்கே குகை மாதிரி செட் போட்டு படத்தின் பெரும் பகுதியை எடுத்து வருகின்றனர்.

Also Read: இந்தியன் 2 படத்தில் இணையும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை.. ஒரு வேளை கமலுக்கு டூப்பா இருப்பாரோ!

இந்த குகை செட்டிங்கில் சேனாதிபதியின் சிறுவயது பிளாஷ்பேக் காட்சிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சங்கர் அவருடைய டெக்னீஷியன்களிடம் சொல்வது ஒன்றாம், அவர்கள் செய்வது ஒன்றாம். இதுபோன்ற ஒரு கட்டத்தில் அவர் ஒரு கெட்டப்பில் நீங்கள் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு மாறாக சங்கரை கோபப்படும் அளவிற்கு வேறு ஒரு கெட்டப்பில் வந்திருக்கின்றனர்.

இப்படி கருத்து வேறுபாடு காரணமாக பல சீன்கள் பாலாகி வருகின்றதாம். இதனால் சங்கர் மிகுந்த அப்செட்டில் இருக்கிறார். மேலும் இந்தியன் 2 வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரையிலும் படத்தை பற்றி எந்த அப்டேட்சும் வரவில்லை. கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை மட்டும் தான் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

Also Read: இந்தியன் 2 படத்திற்காக மும்பையிலிருந்து பறந்து வந்த டீம்.. சேனாதிபதிக்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல்

Trending News