வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தளபதியின் சட்டையை பிடித்து சண்டை போடும் பிரசாந்த்.. GOAT படத்தில் நடந்த மோதல் வீடியோ

Clash video between Actor Vijay- prashanth: தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25 ஆவது தயாரிப்பாக இந்த படம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இதில் விஜய் உடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், பிரேம்ஜி, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என திரைபட்டாளமே இணைந்து நடிக்கிறது.

இந்த படத்தில் விஜய் உடன் பிரசாந்த் சீரியஸாக சண்டை போடும் காட்சி தற்போது இணையத்தில் லீக்காகி ட்ரெண்ட் ஆகிறது. டைம் டிராவல் ஜானரில் உருவாகும் GOAT படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தந்தை விஜய்க்கு நடக்கும் துரோகத்தை மகன் விஜய் டைம் டிராவல் செய்து முறியடிப்பது தான் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.

‘இனிமே பேச்சு இல்ல வீச்சு தான்’ என மொத்த கோட் டீமே வெறிகொண்டு இந்த படத்தில் நடிக்கிறது. இதில் விஜய்யும் பிரசாந்தும் நடு ரோட்டில் தீவிரமாக எதைப் பற்றியோ விவாதிக்கின்றனர். ஒரு கட்டத்தில் விஜய்யின் கையில் இருக்கும் செல்போனை பிரசாந்த் பிடுங்கி தளபதியின் சட்டையைப் பிடித்து சண்டை போடுகிறார்.

Also Read: விஜய், அஜித்துக்கு முதலமைச்சராகவும் யோகம் உண்டா.? ஜோசியரை நம்பும் சினிமா

விஜய்- பிரசாந்த் இருக்கும் இடையே நடந்த மோதல் வீடியோ

இந்த காட்சியை யாரோ டாப் அங்கிளில் இருந்து செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். GOAT படத்தின் முக்கிய காட்சி லீக் ஆனது தெரிந்ததும் படக்குழுவினர் பயங்கர அப்செட்டில் இருக்கின்றனர். இது விஜய்க்கு தெரிந்ததும் வெங்கட் பிரபுவை கிழிகிழின்னு கிழிக்கிறார்.

இனி மேலாவது கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று வெங்கட் பிரபுவை தளபதி எச்சரித்து இருக்கிறார். இதே போன்று தான் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவும் வெளியாகி படக்குழுவை பதற வைத்தது. அதே போன்று தான் இப்போது GOAT படத்திலும் நடந்திருக்கிறது.

தளபதியின் சட்டையை பிடித்து சண்டை போடும் பிரசாந்த்

GOAT-Vijay- prashanth-cinemapettai
GOAT-Vijay- prashanth-cinemapettai

Also Read: விஜய்யை பார்த்து CM க்கு ஆசைப்படும் 4 நடிகர்கள்.. காசு பணம் இருந்தா அரசியலுக்கு வந்து விடலாமா என்ன?

Trending News