புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆர் ஜே பாலாஜியின் நக்கலான நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம்.. முழு படத்தை OTT-யில் பார்க்க கிளிக் செய்யவும்

ஆர் ஜே பாலாஜி மற்றும் என் ஜே சரவணன் இயக்கத்தில் நகைச்சுவை படமாக வெளியானது வீட்ல விசேஷம். இப்படத்தில் ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் உடன் இணைந்த போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படம் ஜூன் 17 திரையரங்குகளில் வெளியாகி நேர்மையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஜூலை 15 ஜி5 ஓடிடி தளத்திலும் வெளியானது.

வீட்ல விசேஷங்க படத்தில் திருமணம வயதில் மகன்கள் உள்ள நிலையில் தந்தை சத்யராஜின் அளவுகடந்த கொஞ்சல் காரணமாக அம்மா ஊர்வசி கர்ப்பமாகிறார். இதை எப்படி மகன்களிடம் சொல்வது என்றும், இந்தச் சமுதாயம் இதை எப்படிப் பார்க்கும் என்று இவர்கள் பயப்படுகிறார்கள்.

அப்படியே இந்த படத்தை கொஞ்சம் வேடிக்கையாகவும் சொல்கிறார்கள். இந்த விஷயம் தெரிந்ததும் ஆர்ஜே பாலாஜியின் ரியாக்சன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சத்யராஜ் மற்றும் ஆர் ஜே பாலாஜி இடையே உள்ள டைமிங் காமெடி படத்திற்கு பலம் சேர்த்தது. மொத்தத்தில் ஒரு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படமாக வீட்ல விசேஷங்க படம் அமைந்தது.

இப்படம் 7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் உலகம் முழுவதும் 9.6 வசூல் செய்து வணிகரீதியான லாபத்தை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான பிறகும் ரசிகர்கள் வீட்ல் விசேஷம் படத்தை அதிகம் பார்த்து வருகின்றனர்.

veetla vishesam

முழுப்படத்தையும் OTT-யில் பார்க்க

Trending News