சட்டசபை கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள், 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி கூட்டறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார்.
ஏனெனில் ஜனவரி மாதத்தில் பெய்த தொடர் மழையினாலும், புரவி மற்றும் நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தற்போது விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார்.
ஏனென்றால் தஞ்சைக்கு பிரசாரத்தின்போது வருகை புரிந்த முதல்வரிடம் விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும்படி, கோரிக்கை மனுவை கொடுத்ததற்கு இவ்வளவு விரைவில் தமிழக முதல்வர் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ரங்கநாதன், தமிழக முதல்வரை நேரில் சென்று நன்றி தெரிவித்துள்ளார்.
அதேபோல் எதிர்பாராத நேரத்தில் விவசாயிகளுக்கு இப்படி ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டதற்கு எங்களுடைய நன்றி கலந்த பாராட்டுக்கள் என்று விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாய குடும்பத்திலிருந்து முதல்வரான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் விவசாயிகளின் துயரத்தை நன்றாக அறிந்தவர் என்பது தற்போது புலப்படுகிறது.
எனவே தற்போது தமிழக முதல்வர் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கு தமிழ்நாட்டின் பல பகுதியில் உள்ள விவசாயிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.