வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் ஒரே நாளில் கிட்டத்தட்ட பத்து இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றார்.
அப்போது அதிமுக அரசு செய்த நலத்திட்டங்களை மக்களிடம் விவரித்து, தங்கள் கட்சி வேட்பாளர்களையும், தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தொகுதிவாரியாக மக்களை சந்தித்து வருகிறார்.
ஏனென்றால் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்களுக்காக களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
எனவே தமிழக முதல்வரின் இந்த தேர்தல் யுக்தியால் அதிமுக கூட்டணி கட்சிக்குள் பலமாக அமைந்துள்ளது.
அதேபோல் தமிழக முதல்வர் மேற்கொள்ளும் அனல்பறக்கும் பிரச்சாரத்தின்போது மக்களும் அவருக்கு அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.