தமிழகத்தில் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவை விட கூடுதலாக 1,108 விழுக்காடுகள் மழை பெய்ததால், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 25 சென்டி மீட்டர் மழை பதிவானது.
இதன் விளைவாக விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து, பயிர் சேதம் ஏற்பட்டதற்கு தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூபாய் 1,116 கோடி வழங்கும்படி தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சுமார் 11.43 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதி உதவியும் வழங்கப்படும். மேலும் 6.81 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கும் படியும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அது மட்டுமில்லாமல் ஏற்கனவே புயல் நிவாரண நிதியாக ரூபாய் 543.10 கோடி விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் தென் தமிழக மாவட்டங்களை மத்திய குழு வரும் பிப்ரவரி 3, 4, 5ம் தேதிகளில் மீண்டும் பார்வையிட உள்ளனர் என தமிழக முதல்வரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி வழங்கும் வடிவம் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு உச்சவரம்பு இடுபொருள் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசாணையை தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டுள்ளார்.