புதன்கிழமை, ஜனவரி 8, 2025

6,941 கோடி மதிப்பிலான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்.. உற்சாகத்தில் விவசாயிகள்

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல்கட்ட பணிக்கு அடிக்கல் நாட்டி கால்வாய் வெட்டும் பணியை தொடங்கி வைத்துள்ளார்.

இதற்காக ரூ. 6,941 கோடி மதிப்பிலான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீர்ப்பாசனம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு வெண்ணாறு வரை சுமார் 118 கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்வாய் வெட்டும் பணி செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூரில் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்றனர்.

அதுமட்டுமில்லாமல் விவசாயிகளும் நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் சென்று இந்தத் திட்டத்திற்கு அமோக வரவேற்பளித்தனர். இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 17 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

eps-new-scheme

எனவே இவ்விழாவில் பேசிய தமிழக முதல்வர், காவிரியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், அதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் தமிழக முதல்வர்.

அதன்பின் பேசிய துணை முதலமைச்சர், நூற்றாண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை அதிமுக அரசு பத்தே ஆண்டில் செய்து முடிக்கும் என்று பெருமிதத்துடன் பேசினார்.

Trending News