வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

வேட்பாளர்களின் நேர்காணலுக்கு முன், தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கை.. சதி திட்டத்தை முறியடிப்போம்!

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களுடைய தொகுதி வேட்பாளர்களை மும்முரமாக தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று காலை தொகுதி வேட்பாளர்களின் நேர்காணலுக்கு முன் உரையாற்றியுள்ளார். அதில் அதிமுக ஆதரவாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

ஏனென்றால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் என்பதால், பல்வேறு சதி திட்டங்கள் தீட்ட படுவதால் அதை முறியடித்து தேர்தலில் வெற்றி காண வேண்டும் என்பதால் அனைவரும் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

edappadi-jayalalitha
edappadi-jayalalitha

அதுமட்டுமில்லாமல் கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை ஒருமித்த ஆதரவோடு வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்த தேர்தலில் மட்டும் அதிமுக வெற்றி பெற்று விட்டால், அதன்பின் எதிர்க்கும் சக்தி எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை.

ஆகையால் அனைவரும் ஒருங்கிணைந்து வரும் சட்டமன்ற தேர்தலுக்காக பணியாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending News