திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தினசரி 2GB டேட்டா இலவசமாக கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும்.. தமிழக முதல்வரின் அறிவிப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் சீரிய நடவடிக்கையால் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் 32 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி வழங்கும் தமிழக அரசு, கொரோனா தொற்று காலத்தில் அவர்கள் இணைய கல்வியை வீட்டிலிருந்து தொடர தினசரி 2GB டேட்டா இலவசமாக வழங்கப்படும் என தற்போது தமிழக முதல்வர் அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனால் கல்லூரி மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆகையால் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையில் 3 மாதங்களுக்கு எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர்.

CM-Edappadi-Palaniswami

எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9, 69, 047 மாணவர்களுக்கு இந்த இலவச டேட்டா வழங்கப்படும்.

ஆகையால் இந்த இலவச டேட்டா கார்டை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Trending News