தமிழ் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு திரையில் இடம் கொடுத்து கை பிடித்து தூக்கி விடுவார் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி கண்ட பிரபலங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
சிவாஜி கணேசன்: 1987 இல் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளியான வீரபாண்டியன் திரைப்படத்தில் விஜயகாந்துடன் சேர்ந்து சிவாஜிகணேசன் நடித்திருப்பார். ராதிகா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். சிவாஜிகணேசன், ராதிகாவுக்கு அண்ணனாக படத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் தயாரிப்பாளர் துரை, படத்தின் இசை சங்கர் கணேஷ்.
ராம்கி: ராம்கி, ஸ்ரீபிரியா, ஆர்யா நடித்த 1988 ஆம் ஆண்டு வெளியான செந்தூரப்பூவே என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் பிஆர் தேவராஜன். இப்படத்தின் பாடல்கள் முத்துலிங்கம், வைரமுத்து, ஆபாவாணன் ஆகியோர் எழுத மனோஜ் கியான் இசையமைத்துள்ளார்.
முரளி: என் ஆசை மச்சான் திரைப்படத்தில் முரளி உடன் சேர்ந்து விஜயகாந்த் நடித்திருப்பார். ரேவதி, ரஞ்சிதா கதாநாயகிகளாக நடித்து இருந்தார்கள். இப்படத்தின் இயக்குனர் சுந்தர்ராஜன், இசை தேவா. விஜயகாந்த் ஆறுச்சாமியாகவும் ரேவதி தாயம்மாவாகவும் படத்தில் நடித்திருந்தார்கள்.
சரத்குமார்: ஆர் ஆர் இளவரசன் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தாய்மொழி. இப்படத்தில் சரத்குமார் மற்றும் மோகினி நடித்துள்ளனர். இப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா
இசையமைத்துள்ளார்.
தளபதி விஜய்: செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் விஜய், யுவராணி கௌதமி ஆகியோருடன் விஜயகாந்த் இணைந்து நடித்திருப்பார். 1993 வெளியான இத்திரைப்படத்தை தளபதி விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியுள்ளார். விஜயகாந்த் இப்படத்தில் செந்தூரப்பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
சூர்யா: விஜயகாந்துடன் சூர்யா இணைந்து நடித்த படம் எங்கள் அண்ணா. இப்படத்தில் மீனா மற்றும் மானசா கதாநாயகிகளாக நடித்து இருந்தார்கள். இப்படத்தில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், அறிமுக இசையமைப்பாளராக பரணி இசை அமைத்திருப்பார். இப்படத்தில் சூர்யாவுக்காக நடிகர் விஜய் நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து பாடலை பாடியுள்ளார்.