மதுரையை சேர்ந்த நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அங்கீகாரம் பெற்றார்.
தற்போது பிரபு தேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர பார்ட்டி என்ற படத்திலும் ஜெய்யுடன் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஆன்லைனில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். அதில் கரப்பான் பூச்சி இருந்ததாக பரபரப்பை கிளப்பியுள்ளார் நிவேதா பெத்துராஜ். உலக அளவில் பிரபலமான ஸ்விகி இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு சாப்பாடு டெலிவரி செய்து வருகிறது.
இதில் ஈசிஆரில் உள்ள ஒரு ஹோட்டலில் நிவேதா பெத்துராஜ் ஆர்டர் செய்துள்ளார். அந்த சாப்பாட்டில் கரப்பான் பூச்சி இருந்ததாக தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் ஆதாரத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
உடனடியாக ஸ்விகி நிறுவனம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஹோட்டலை சுகி ஆப்பில் இருந்து நீக்கி விட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இதற்கான காசை உடனே திருப்பி கொடுத்துவிட்டனராம். இது ஒருமுறை மட்டும் இல்ல இரண்டாவது முறை இது போன்று நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது கவனமாக செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
