Movie Por Thozhil: அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன் அபாரமான நடிப்பில் வெளியான திரைப்படம் போர் தொழில். ஆர்ப்பாட்டமே இல்லாமல் சில படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுண்டு. அவ்வாறு தான் இப்போது போர் தொழில் படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
சிறிய பட்ஜெட் அதாவது வெறும் 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் கதைகளம் தான். பொதுவாக பல சீரியல் கில்லர் படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கிறது.
Also Read : போர் தொழில் படத்தில் மிஸ்ஸான 5 மட்டமான லாஜிக்.. காசு வராததால் கழுவி ஊற்றிய பயில்வான்
ஆனால் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ராட்சசன் போல் ஒரு படத்தை எடுக்க முடியாது என்ற சூழ்நிலை இருந்தது. இப்போது அதையும் தாண்டி சீட்டின் நுனிக்கு வர செய்யும் அளவிற்கு போர் தொழில் படம் வந்துள்ளது. இந்நிலையில் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படம் அசோக் செல்வனின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக உள்ளது. இந்நிலையில் போர் தொழில் படம் இதுவரை 30 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. அதுமட்டும்இன்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே 3.5 கோடி வசூல் செய்திருக்கிறது.
Also Read : கோடிகளை குவித்த அசோக்செல்வனின் 5 படங்கள்.. மூன்றே நாளில் போர் தொழில் செய்த வசூல் சாதனை
இப்போதும் போர் தொழில் படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் வசூல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டு தியேட்டர் ஷேர் மட்டும் கிட்டத்தட்ட 15 கோடியை தாண்டும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு வெளியான படங்களில் போர் தொழில் படத்தின் மூலம் சிறந்த அறிமுக இயக்குனர் என விக்னேஷ் ராஜாவை பாராட்டி வருகிறார்கள்.
இந்த படத்தின் வெற்றியின் மூலம் விக்னேஷ் ராஜா மற்றும் அசோக் செல்வன் இருவருக்குமே தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த நல்ல வாய்ப்புகள் வர இருக்கிறது. இருவருமே நல்ல பாதையை தேர்ந்தெடுத்து சென்றால் கண்டிப்பாக நிச்சயம் பெரிய இடத்திற்கு வருவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Also Read : அசோக் செல்வனை டம்மி ஆக்கிய நடிப்பு அரக்கன்.. ரீ-என்ட்ரியில் நாலா பக்கமும் பாராட்டு மழை!