செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

விஜய்யின் கடைசி 5 படங்களின் வசூல் விவரம்.. மொத்தத்தையும் அள்ளுமா கோட்.?

Vijay: தளபதி விஜய் தற்போது வசூல் மன்னனாக திகழ்ந்து வருகிறார். அவருடைய படங்கள் கண்டிப்பாக வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிடும். ஏனென்றால் அவரது ரசிகர்கள் படத்தை எப்படியும் வெற்றி அடைய செய்து விடுவார்கள். இந்த சூழலில் கடைசியாக விஜய் நடித்த ஐந்து படங்களின் வசூல் விபரத்தை பார்க்கலாம்.

பிகில்

அட்லீ, விஜய் கூட்டணியில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவான படம் தான் பிகில். இப்படம் கிட்டத்தட்ட 180 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் நல்ல வசூலையும் பெற்று தந்தது. அதன்படி கிட்டதட்ட 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இருவரும் முதல்முறையாக கூட்டணி போட்ட படம் தான் மாஸ்டர். மேலும் எதிர்பார்த்ததை விட பல மடங்கு லாபத்தை பெற்று தந்தது. சுமார் 135 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 300 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது. கோவிட் காலத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது.

பீஸ்ட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தான் பீஸ்ட். இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை தான் பெற்றுக் கொடுத்தது. அந்த வகையில் 150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 280 கோடி வசூல் செய்தது.

வாரிசு

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தான் வாரிசு. குடும்ப படமாக எடுக்கப்பட்ட இந்த படம் துணிவுடன் வெளியானதால் சிறு சருக்களை சந்தித்தது. மேலும் 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 300 கோடி வசூலை கொடுத்தது.

லியோ

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் விஜய்யுடன் கூட்டணி போட்ட படம் தான் லியோ. இந்த படம் மல்டி ஸ்டார் படமாக உருவான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. ஆனால் வசூலை பொருத்தவரையில் நல்ல லாபத்தை கொடுத்தது. 300 கோடி பட்ஜெட்டில் உருவான இருப்பிடம் 450 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது.

இப்போது தியேட்டரில் வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் உருவான கோட் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கும் நிலையில் ஆயிரம் கோடி வசூலை பெறும் என்று கூறப்படுகிறது. முதல் நாளே கிட்டத்தட்ட 50 கோடியை தாண்டி வசூலை அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.

வசூல் வேட்டையாட போகும் கோட்

Trending News