செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

மூன்றே நாளில் இத்தனை கோடி வசூலை தட்டி தூக்கிய மாஸ்டர்! அரண்டு போன கோலிவுட்

கொரோனோ அச்சுறுத்தலால் ஆறு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் கடந்த நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டாலும் மக்களை திரையரங்கிற்கு வர ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் தற்போது மாஸ் ஹீரோவான தளபதி விஜய்யின் மாஸ்டர் படம், பண்டிகை அன்று ரிலீஸ் செய்யப்பட்டதால், தளபதி ரசிகர்கள் அதிகாலை முதலே தியேட்டர்களில் அலை மோதுகின்றனர். எனவே

இதைப்போன்று அண்டை மாநிலங்களான கர்நாடகத்திலும், கேரளாவிலும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

ரசிகர்களின் பேரார்வத்தால் மூன்றே நாளில்  அனைத்தையும் சேர்த்து  ரூபாய் 100 கோடியை வசூலை தாண்டிவிட்டதாம். இதற்கு முழு காரணம் தளபதி விஜய் ரசிகர்களின் அளவுகடந்த ஆதரவுதான்.

இருப்பினும் தமிழக அரசு 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் தளபதி ரசிகர்களின் அதிக ஆர்வத்தினாலே, கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி அளித்தது.

master box office collection

ஆகையால் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் மூன்றே நாளில் இவ்வளவு அதிக வசூலை தட்டிச்சென்றது கோலிவுட் வட்டாரமே அரண்டு போய் உள்ளது .

Trending News