திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய் டிவியின் முக்கியமான ஹீரோவை தட்டி தூக்கிய கலர்ஸ் டிவி.. புத்தம் புது சீரியல் அப்டேட்!

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடி முடித்த ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் கதாநாயகனாக வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்த திரவியத்திற்கு தம்பியாக புகழ் என்ற கதாபாத்திரத்தில் ஷியாம் நடித்திருந்தார். இந்த சீரியலில் புகழ்-அகிலா ஜோடிக்கு சின்னத்திரை ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு கிடைத்தது.

விஜய் டிவி சீரியல்களில் கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, நெஞ்சம் மறப்பதில்லை, அரண்மனைக்கிளி போன்ற சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த ஷியாம், தற்போது கதாநாயகனாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புது சீரியலான வள்ளி திருமணம் என்ற தொடரில் நடிக்கவுள்ளார்.

இதுவரை சின்ன சின்ன கேரக்டரில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த ஷியாமிற்கு வள்ளி திருமணம் சீரியல் மூலம் கதாநாயகனாக நடிக்க கிடைத்த முதல் வாய்ப்பை, அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த சீரியலை கதாநாயகியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலின் கதாநாயகி நட்சத்திரா நடிக்கவுள்ளார். எனவே நட்சத்ரா-ஷியாம் ஜோடி முதல் முதலாக இணைந்துள்ள வித்தியாசமான காம்போ என்பதால், அவர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி சீரியல் எவ்வாறு வொர்க் ஆக போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இருப்பினும் ஷியாம் மற்றும் நட்சத்திரா இருவரும் இதுவரை நடித்திருந்த சீரியல் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிக்காட்ட, ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளனர். அதைப்போல் வள்ளி திருமணம் சீரியலிலும் இருவரும் தங்களுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டுவார்கள் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே பொம்மலாட்டத்தின் மூலம் சித்தரிக்கப்பட்ட வள்ளி திருமணம் சீரியலின் முதல் புரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆகையால் கூடிய விரைவில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலுக்காக சின்னத்திரை ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Trending News