செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

கோமாளி தம்பி முதல்ல படம் ரிலீஸ் ஆகட்டும். ஆரம்பத்திலேயே அடாவடி பேச்சு!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானவர் அஸ்வின். இந்த சீரியலில் தற்போது பிக்பாஸில் கலக்கிக் கொண்டிருக்கும் பவானி ரெட்டி அஸ்வினுக்கு ஜோடியாக நடித்தார்.

அந்த சீரியல் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறாததால் பாதியிலேயே அவசரமாக முடிக்கப்பட்டது. அதன் பிறகு அஸ்வினுக்கு நடிப்பதற்கு வேறு எந்த வாய்ப்பும் கிடைக்காத நிலையில் விஜய் டிவியில் பெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அஸ்வினுக்கு சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உருவானது. அதிலும் பெண் ரசிகைகள் இவருக்கு ஏராளம் உண்டு. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி மற்றும் புகழுடன் சேர்ந்து அவர் செய்த அலப்பறைகள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

அதன்பிறகு ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த அஸ்வின் தற்போது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் அவருடன் இணைந்து நடிகை தேஜா, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கான டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவராலும் ரசிக்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட நடிகர் அஸ்வின் பேசிய பேச்சு தற்போது பரபரப்பாகியுள்ளது.

அஸ்வின் இந்த திரைப்படத்தில் நடிக்க ஆரம்பிக்கும் முன் சுமார் 40 கதைகளை கேட்டதாகவும், அந்த கதைகளை கேட்கும் பொழுது தான் தூங்கி விட்டதாகவும் தெரிவித்தார். அஸ்வினின் இந்த திமிரான பேச்சால் நெட்டிசன்கள் பலரும் கடுப்பாகி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பல நடிகர்களும் பந்தா ஏதும் இல்லாமல் எளிமையாக இருக்கும் பொழுது, நடிக்க ஆரம்பித்த முதல் படத்திலேயே அஸ்வின் இவ்வளவு பந்தா காட்டுவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது. தற்போது அஸ்வின் பேசிய இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Trending News