ஜெயலலிதா அவர்கள் நடிப்பதற்கு ஆர்வமே இல்லாமல் ஒரு கட்டாயத்தால் சினிமாவிற்குள் நுழைந்தார். பின்பு சில படங்களில் நடித்த பிறகு அதன் வெற்றியே பார்த்த அவருக்கு அதன் மேல் அதிக அளவில் நாட்டம் ஏற்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து அடுத்த படங்களில் முழு ஆர்வத்துடன் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இவர் நடித்த பெரும்பாலான படங்கள் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்து அவரின் பிரதானமான நடிகையாகவே மாறிவிட்டார். இவருடன் மட்டுமல்லாமல் ஜெய்சங்கர், சிவாஜி, முத்துராமன் போன்றவர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை தொட்டார். இப்படி ஒரு காலத்தில் சினிமாவில் வெற்றி நாயகியாக இருந்தார்.
Also read: சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் சாதித்து காட்டிய 6 பிரபலங்கள்.. சிங்கப் பெண்ணாக கர்ஜித்த ஜெயலலிதா
பின்பு நடிப்பை மட்டும் ஆர்வமாக வைத்துக் கொண்டிருந்த இவர் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கு அரசியல் செல்லும் ஐடியாவை பிரபல நடிகர் ஒருவர் கொடுத்திருக்கிறார். அவர் சினிமாவையும் தாண்டி ஜோதிடம் பார்ப்பதில் மிகவும் வல்லவர்.
இவருக்கு மட்டுமல்லாமல் ரஜினிக்கும் ஒரு ஜோசியம் சொல்லியிருக்கிறார். அதாவது ரஜினியிடம் நீங்கள் தான் தமிழில் சூப்பர் ஸ்டார் ஆவீர்கள். அதனால் மற்ற மொழியை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டாம் என்று பெரிய ஐடியா கொடுத்துள்ளார். இவர் சொல்வதைக் கேட்டு தான் ரஜினியும் தீர்க்கமான முடிவுடன் தமிழில் மட்டும் நடிக்க தொடங்கினார்.
Also read: ரஜினியின் பயோபிக்கில் நடிக்கப் போகும் ஸ்டார் நடிகர்.. கமலின் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் படம்
இவர்கள் இருவருக்குமே ஜோசியம் பார்த்து கட்டத்தை தீர்மானித்து சொன்னவர் வேறு யாருமில்லை. அவர்தான் சினிமாவில் கிட்டத்தட்ட 400 படங்கள் நடித்து காமெடியில் கலக்கிய வெண்ணிற ஆடை மூர்த்தி. இவருடைய நகைச்சுவைக்கு அப்போதைய காலத்தில் அதிகமான ரசிகர்களை கைவசம் வைத்துக் கொண்டவர்.
இவருடைய பேச்சை கேட்டு தான் ஜெயலலிதா மற்றும் ரஜினி இவர்கள் இருவரும் அடுத்த கட்ட முடிவுகளை நம்பிக்கையுடன் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அதேபோல் அவர் சொன்னதும் உண்மையாகிவிட்டது. ஜெயலலிதா அரசியலிலும் சாதித்து அயன் லேடி ஆக பெயர் எடுத்துவிட்டார். அதே மாதிரி ரஜினி தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு வலம் வருகிறார்.
Also read: ரஜினிக்கு நடந்த பெரும் அவமானம்.. சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு காரணமான அந்த வார்த்தை