வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மோசமான குணத்தால் ரஜினி, கமலே வெறுத்து ஒதுக்கிய முக்கிய காமெடியன்.. பணம் படைத்தவன் மதியை இழப்பான்

தமிழ் திரையுலகில் தற்பொழுது நகைச்சுவை நடிகர்களுக்கான பஞ்சம் இருந்ததைப் போல் வேறு எந்த காலத்திலும் இருந்ததில்லை என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ், மனோரமா, கவுண்டமணி, செந்தில், சந்தானம் தற்போது உள்ள சூரி மற்றும் யோகி பாபு வரை இந்த தேடல் நீண்டு கொண்டே செல்கிறது. இருந்தும் தற்போது உள்ள சூழலில் ஓய்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் சற்று சிரிக்க அல்லது சற்று நிம்மதியாக இருக்க நினைக்கும் நடுத்தர குடும்பத்தினரின் துயரம் துடைக்க சில காலம் தொட்டு வடிவேலு என்றொரு நகைச்சுவை நடிகர் கோலோச்சி வந்தார் . அவரும் தற்போது “காணவில்லை” என்ற அறிவிப்போடு இருப்பது சற்று வருத்தப்படவே வைக்கிறது.

இருந்தும் காலத்தின் தேவை கருதி சில நடிகர்கள் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொண்டே இருந்துள்ளனர். அந்த நபர்களில் மிக மதிக்கக்கூடிய ஒருவர் திரு ஜனகராஜ் அவர்கள். தன்னுடைய திரை பயணத்தை 1978 இல் கிழக்கே போகும் ரயில் மூலம் தொடங்கினார். இயக்குனர் பாரதிராஜாவின் ஆஸ்தான நகைச்சுவை நடிகராக ஜனகராஜ் இருந்தார்.

Also Read: இளையராஜாவை வெறுத்த ரஜினி.. 28 வருடங்களாக ஒதுக்கி வைத்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா!

ஜனகராஜிக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி தந்த படம் 1981 இல் வெளிவந்த பாலைவனச்சோலை இப்படத்தின் இயக்குனர் ராபர்ட் ராஜசேகர். இவரது ஒரு படப்பிடிப்பு சமயத்தில் ஒரு கார் விபத்தின் போது நடிகர் ஜனகராஜ் முகம் சிதைவுக்குள்ளானது. இதைத்தொடர்ந்து அவரது முகம் சற்று பாதிக்கும்படியாக இருந்தது இதை நாம் பல படங்களில் கவனித்திருக்கலாம்.

இதற்கு உண்டான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போது அவர் சற்று ஆக்ரோஷமாக நடந்து கொள்வார் என்பது படப்பிடிப்பின் உள்ள நபர்கள் கொடுத்ததாக  தகவல்.ஆனால் உண்மை என்னவெனில் அவருக்கு ஆரம்பம் முதலே தீராத குடிப்பழக்கம் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது. இது ஒரு புறம் இருந்தாலும் ஜனகராஜ் என்று ஒரு மாபெரும் கலைஞனை நாம் மறக்க இயலவில்லை.

Also Read: இப்பவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ரஜினியின் 10 படத்தின் வசனங்கள்.. அவரே எழுதி அதிரடி காட்டிய பஞ்ச் டயலாக்

இவரை நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்திற்குள் நாம் சுருக்கவும் விரும்பவில்லை. தற்போது வடிவேலு இருந்த இடத்தை போல் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை எண்பதுகளில் உருவாக்கியவர் நடிகர் ஜனகராஜ். ஜனகராஜின் குடிப்பழக்கம் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் சில நெருடலான நிகழ்வுகள் நடந்தபடியால் தனது சாம்ராஜ்யத்தை இழந்தார்.

ரஜினியுடன் பணக்காரன், பாஷா, ராஜாதி ராஜா, மற்றும் கமலுடன்குணா, விக்ரம், அபூர்வ சகோதரர்கள், போன்ற பல படங்களில் நடித்தவர். இப்பேர்ப்பட்ட ஜாம்பவான்களும் இவரை விரும்பியே பல படங்களில் நடிக்க அழைத்தனர். ஆனால் இவரது குடிப்பழக்கம், எல்லாரிடமும் அடாவடியாக பேசும் தன்மையும் இவரது சினிமா கேரியரை  ஒரு கேள்விக்குறியாகவே ஆக்கியது. ரஜினி மற்றும் கமல் அதன்பின் இவருடன் நடிக்க சிறிது தயக்கம் காட்டினார்கள். அதன் பின்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜனகராஜ் சினிமாவை அப்படியே ஒதுக்கிவிட்டார்.

Also Read: பாபாவை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.. நாலாபுறமும் வாங்கும் கல்லடி

Trending News