சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மாஸ் ஹீரோவை காலி செய்ய டீலில் இறங்கிய காமெடி பீஸ்.. கோடிக்கணக்கில் கைமாறிய காசு

மாஸ் ஹீரோ இப்போது புது அவதாரம் எடுத்துள்ளார். மக்கள் பணி செய்வதற்காக தன்னை பல வருடங்களாக தயார் படுத்திக் கொண்டுள்ள அவர் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டார்.

இதனால் பல முக்கிய புள்ளிகளும் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள். அதிலும் அந்த பிரபல கட்சி இதை ஆரம்பத்திலேயே வெட்டிவிட வேண்டும் என்று சில வேலைகளை செய்வதாக அதிர்ச்சி தகவல்கள் கிளம்பியுள்ளது.

Also read: பேராசையால் பலான வேலை பார்த்த கணவர்.. மானம், மரியாதை போய் வாய்ப்பும் இல்லாமல் தவிக்கும் நடிகை

அதற்கு துருப்புச் சீட்டாக காமெடி நடிகர் இறங்க போவதாகவும் செய்திகள் லீக்காகி கொண்டிருக்கிறது. இதற்காக அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டு அதன் ஒரு பகுதி அட்வான்ஸாக கொடுக்கப்பட்டும் விட்டதாம். அதனாலேயே அந்த நடிகர் தற்போது அந்த கட்சியின் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறாராம்.

ஏற்கனவே சிங்கம் போல் அரசியலில் இருந்த நடிகரையே இவர் கோமாளியாக்கி சாய்த்தார் என்ற பேச்சு இப்போது வரை இருக்கிறது. அதனாலேயே இந்த காமெடி நடிகரின் இமேஜும் டோட்டலாக காலியாகி சினிமா வாய்ப்பு கூட கேள்விக்குறியானது.

இப்படி பட்டும் திருந்தாத இவர் மாஸ் நடிகரை சாய்க்க போகிறேன் என்று கூறுவதெல்லாம் வேடிக்கையாக தான் இருக்கிறது. என்ன தான் இவர் இறங்கி வேலை பார்த்தாலும் நடிகரிடம் இவருடைய ஆட்டம் செல்லுபடி ஆகாது. ஆனாலும் அந்த கட்சி காமெடி நடிகரை நம்பி இப்படி ஒரு பொறுப்பை கொடுத்திருப்பது வெட்டி செலவு தான் என்ற பேச்சும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read: பெரும்புள்ளியின் கண்ட்ரோலுக்கு சென்ற நடிகை.. ஆதாயத்திற்காக தோழி செய்த மாமி வேலை

Trending News