வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜய்யை மிஞ்சி சொத்து சேர்த்து வைத்திருக்கும் காமெடியன்..  ஒரு படத்தின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா!.

Comedy Actor More Assets Than Vijay: கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ்  நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய், கடைசியாக நடித்த லியோ படத்திற்கு 120 கோடி சம்பளம் வாங்கினார். அதன் தொடர்ச்சியாக  வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் ‘தளபதி 68’ படத்திற்கு விஜய்க்கு 200 கோடி சம்பளம் என சொல்லப்படுகிறது.

இப்படி தாறுமாறாக சம்பளம் வாங்கும் விஜய், மொத்தமாக 420 கோடி சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பை மிஞ்சி, காமெடி நடிகர் ஒருவர் சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்.  நடிகர் பிரம்மானந்தம் தெலுங்கு காமெடி நடிகர். இவர் தெலுங்கில் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும்  1200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

அதனாலையே இவரை எல்லாருக்கும் தெரியும். இவரின் சொத்து மதிப்பு மட்டும் 490 கோடிக்கு மேல்  இருக்கும். இவர் ஒரு படத்திற்கு மட்டும் இரண்டு முதல் மூன்று கோடி சம்பளம் வாங்குகிறார். அத்துடன் விளம்பரங்களில் நடிப்பதற்கு 1 முதல் 2 கோடி சம்பளம் வாங்குகிறார்.

Also Read: ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய காமெடி நடிகர்.. 1000 படத்திற்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை!

காமெடி நடிகர் பிரம்மானந்தம் சொத்து மதிப்பு

இதுவரை 1200 படங்களுக்கு மேல் நடித்த பிரேமானந்தம், ‘அதிக படங்களை நடித்த வாழும் நடிகர்’ என்ற கின்னஸ் ரெக்கார்ட்  படைத்திருக்கிறார். இப்போது 67 வயதை எட்டியதால், இளம் நடிகர்களுக்கு வழிவிட்டு படங்களில் நடிப்பதை குறைத்துக்  கொண்டார். ஒரு காமெடியனாக இருந்து கொண்டு ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த ஒரே காமெடி நடிகரும் பிரம்மானந்தம் தான்.

அத்துடன் அதிக சம்பளம் வாங்கிய காமெடி நடிகரும் இவர் தான். மேலும் இந்தியாவில் அதிக சொத்துக்களை வைத்திருக்கும் நடிகரும் இவர் மட்டும் தான். அதிலும் விஜய்யை தாண்டி பிரம்மானந்தம் சொத்து சேர்த்து வைத்திருப்பது தளபதி ரசிகர்களை வாயை பிளக்க வைக்கிறது.

Also Read: எம் எஸ் பாஸ்கர் மாதிரியே நடிக்கும் கின்னஸ் நடிகர்.. ரிட்டேட் ஆகியும் கமல் தூக்கிட்டு வந்த காமெடியன்

Trending News